Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை: மீண்டு வந்த நெய்மர்.. கோல் மழை பொழிந்த பிரேசில்

    கால்பந்து உலகக் கோப்பை: மீண்டு வந்த நெய்மர்.. கோல் மழை பொழிந்த பிரேசில்

    பிரேசில் அணி தென் கொரியா அணியை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி  காலிறுதிக்கு முன்னேறியது. 

    கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்து, நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்துள்ளன. 

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற நள்ளிரவு 12.30 மணி  நாக்-அவுட் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் தென் கொரியா அணிகள் மோதிக்கொண்டன. உலகளவில் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் காயம் குணமாகி மீண்டும் உலக் கோப்பை போட்டியில் பங்கேற்பது பெரிய எதிர்பார்ப்பை இந்த ஆட்டத்தின் மீது வரவழைத்தது. 

    இந்த ஆட்டம் தொடங்கிய  7-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஜூனியர் ஒருகோல் அடித்து பிரேசில் அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்தில் நெய்மர் ஒருகோல் அடித்தார்.

    இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து ஆட்டத்தின் 29-வது மற்றும் 36- வது நிமிடத்தில் ரிச்சார்லிசன் ஒரு கோலும், லூகஸ் ஒரு கோலும் அடித்து பிரான்ஸ் அணிக்காக கோல் மழை பொழிந்தனர். இதன் மூலம், 4-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை வகித்தது. 

    தென்கொரியா அணியிடமிருந்து ஒரு கோல் கூட வராத நிலையில், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் பால்க் ஒருகோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார். 

    ஆட்டத்தின் இறுதியில் 4:1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், பிரேசில் காலிறுதிக்கு முன்னேறியது. 

    புரோ கபடி: ஒரே புள்ளிகளை பெற்று வெற்றிப்பெற்ற இரு அணிகள்..பிளே ஆஃப் சென்ற ஜெய்பூர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....