Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகச் சாம்பியன் ஆவதே தனது இலக்கு! அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரத்தியானந்தா

    உலகச் சாம்பியன் ஆவதே தனது இலக்கு! அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரத்தியானந்தா

    உலகச் சாம்பியன் ஆவதே தனது இலக்கு என அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரத்தியானந்தா தெரிவித்துள்ளார். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரக்யானந்தா தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த இளம் செஸ் வீரராக தமிழகத்தைச் சேர்ந்த பிரகானந்தா உள்ளார்.

    பிரக்யானந்தா, உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் காரல்சன் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றவராக இளம் வயதிலேயே உலக அளவில் பல முன்னணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதில் மத்திய அரசே அவருக்கே அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது.விருது பெற்ற பிரக்யானந்தா இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர்,

    அர்ஜுனா விருதை தமிழக முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன். தமிழக முதலமைச்சரை வாழ்த்தினார். எனது விளையாட்டு பயணத்திற்கு பள்ளி நிர்வாகம் உறுதுணையாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரராக ஆவது எனது இலக்கு, அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் அடுத்து நடைபெற உள்ள செஸ் போட்டிக்காக இஸ்ரேல் பயணமாக உள்ளேன். தமிழக அரசும் எனக்கு நல்ல உறுதுணையாக இருந்து வருகிறது. சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, சர்வதேச வீரர்கள் தான் செல்லும் இடமெல்லாம் சிலாகித்து பேசி வருகின்றனர். அது தமிழனாக தனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.

    சதுரகிரி மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு! காரணம் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....