Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்நிலவுக்கு அருகில் சென்ற ஓரியன் விண்கலம்! டிச.11-இல் பூமிக்கு திரும்புகிறது...

    நிலவுக்கு அருகில் சென்ற ஓரியன் விண்கலம்! டிச.11-இல் பூமிக்கு திரும்புகிறது…

    வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்ப இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. 

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓரியன் விண்கலத்தின் மூலம் மனித வடிவிலான மாந்திரிகளை அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. மாதிரிகளுக்கு பொருத்தப்பட்டுள்ள தோல்கள் அங்குள்ள கதிர்வீச்சை எவ்வாறு தாங்குகின்றன என்பதை கண்டறியவே இந்தச் சோதனையின் திட்டம் ஆகும். 

    ஆர்டெமிஸ் 1 என்ற இந்த திட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டது. இருப்பினும் தொழில் நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலையின் காரணமாக 3 முறை இந்தத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆர்டெமிஸ் 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  விண்ணில் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பிறகு, ராக்கெட் தனியாக பிரிந்து ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணித்தது.

    ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து பூமியை படம் பிடித்து அனுப்பியது. இதன் மூலம் 1972 ஆம் ஆனதுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்து குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

    இந்நிலையில், நேற்று இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் நெருக்கமாக பறந்துள்ளது. இதனிடையே வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்ப இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

    விண்வெளியில் 226 கிலோ மீட்டர் அகலமுள்ள மிதக்கும் தங்கம்: வியக்க வைக்கும் ஆச்சர்ய நிகழ்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....