Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்திய கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்; சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா

    இந்திய கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்; சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா

    போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணியின் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக லிஸ்பனில் உள்ள சான்டா மரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குறை மாதத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில், உடனடி சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகள் இல்லை என்பதால், அந்த மருத்துவமனையில் இருந்து, வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    இதையடுத்து தாயையும் குழந்தையையும், பத்திரமாக சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களை கூட்டிச் செல்லும் வழியில் தாயின் உடல்நிலை மட்டும் மோசமடைந்துள்ளது. வாகனத்திலேயே மயக்க நிலைக்கு சென்ற அவரை, அதிலிருந்து மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதோடு, அவசர அவசரமாக கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவிலும் சேர்த்துள்ளனர். ஆனால் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணியின் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பிக்கவே , நிர்வாக ரீதியாக நடந்த தவறுக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி மார்ட்டா டெமிடோ தெரிவித்தார். அதோடு நின்றுவிடாமல் தனது பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் கூறிய நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இருப்பினும், புதிய மந்திரி நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் எனவும், புதிய சுகாதாரத்துறை மந்திரியை தேர்ந்து எடுப்பதற்காக வரும் 15ம் தேதி அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அன்டோனியோ லசெர்டா சேல்ஸ் மற்றும் மரியா டி பாத்திமா பொன்சேகா ஆகிய இருவரும் பதவி விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    குறைபிரசவ குழந்தையை மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் – அதிர்ச்சி சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....