Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மலையாள சர்ச்சை நாயகனுடன் ஜோடி சேர்ந்த கல்லூரி பட நடிகை..

    மலையாள சர்ச்சை நாயகனுடன் ஜோடி சேர்ந்த கல்லூரி பட நடிகை..

    மலையாளத் திரைப்பட உலகில் நடிகர் திலீப்பின் கதாநாயகியாக தமன்னா அறிமுகமாகிறார். 

    கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பலரையும் கவர்ந்த தமன்னா, பிறகு பல தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் போன்ற உச்ச நட்சத்திர திரைப்படங்களிலும் தமன்னா நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த இவர் முதல் முறையாக தற்போது மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமாக உள்ளார். 

    மலையாளத்தில் வெளிவந்த ராமலீலா என்ற வெற்றித் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் அருண்கோபி இணையும் அடுத்தப் படத்தின் கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். 

    இத்திரைப்படத்தின் பூஜை நேற்று கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டாக்காரா கணபதி கோயிலில் நடந்தது. இப்பூஜையில், திரைப்படத்தின் கதாநாயகன் திலீப், தமன்னா ஆகியோர் கலந்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் #D147 என்ற ஹேஷ்டேக்குடன் வைரலாகி வருகிறது. 

    நடிகர் திலீபின் 147-வது திரைப்படம் இதுவென்பதாலும், தற்காலிகமாக இத்திரைப்படத்துக்கு D147 என்ற பெயரால் அழைக்கப்படுவதாலும் இணையத்தில் #D147 என்ற ஹேஷ்டேக்குடன் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

    பெரிய பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாக இருப்பதாகவும், வட இந்தியாவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக்கொண்டு இத்திரைப்படம் இருப்பதாகவும், ஆதலால்  குஜராத், மும்பை, ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நடக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....