Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்தியன் வங்கியில் வேலை செய்ய தயாரா? - உடனே விண்ணப்பியுங்கள்..

    இந்தியன் வங்கியில் வேலை செய்ய தயாரா? – உடனே விண்ணப்பியுங்கள்..

    இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    வங்கியில் வேலை செய்வதை நோக்கமாக கொண்டு இளைஞர்கள் பலர் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Faculty மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. அந்த காலியிடத்துக்கு  மாதம் ரூ.12,000 ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், வயது வரம்பு 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, அறிவிக்கப்பட்டுள்ள அலுவலக அதிகாரி பணியிடத்திற்கு ரூ. 20000 ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, செய்முறை விளக்கக்காட்சி ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இப்பணிகளுக்கான எழுத்து தேர்வு 20.12.2022 அன்று நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள்  27.12.2022 அன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indianbank.incareer என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 15.12.2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து மேலும் விவரங்களை அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2022/12/ADVERSTIMENT.pdf என்ற இணையதளத்திற்கு செல்லவும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....