Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த்... பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த வீடியோ

    முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த்… பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த வீடியோ

    ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ஜெயிலர் பட முதல் பார்வை நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில்  நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. 

    இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய்லர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் தோன்றும் விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், இத்திரைப்படமானது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளிரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்தியன் வங்கியில் வேலை செய்ய தயாரா? – உடனே விண்ணப்பியுங்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....