Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மெக்ஸிகோவில் நிலநடுக்கம்; சேதங்கள் குறித்த ஆய்வில் அதிகாரிகள்..

    மெக்ஸிகோவில் நிலநடுக்கம்; சேதங்கள் குறித்த ஆய்வில் அதிகாரிகள்..

    மெக்ஸிகோவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மெக்ஸிகோவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவாகியுள்ளது. 

    மேலும், இந்த நிலநடுக்கமானது, மெக்ஸிகோவில் உள்ள குவெரேரோ மாநிலத்தில் கோரல் ஃபால்சோ என்ற இடத்தின் வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சேதங்கள் குறித்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மேனுவல் லோபெஸ் ஓப்ராடோர் ட்விட்டரில் பதிவிட்டார்.

    முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. இதுமட்டுமல்லாமல், இந்தோனேசியாவில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

    திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் அமையும் என்று ஸ்டாலின் கூறியதில் எந்தவித தவறும் இல்லை; நாராயணசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....