Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கால்பந்து உலகக் கோப்பையால் கூகுள் படைத்த சாதனை.. சுந்தர் பிச்சை சொன்ன ரகசியம்

    கால்பந்து உலகக் கோப்பையால் கூகுள் படைத்த சாதனை.. சுந்தர் பிச்சை சொன்ன ரகசியம்

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியால் கூகுள் ட்ராபிக் நேற்று சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

    கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியில், பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும், இந்த இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியின் வீரர் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்தார். 

    மேலும், அர்ஜென்டினா அணி 1978, 1986-க்குப் பிறகு 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அதிகளிவில் இணையத்தில் விவாதிக்கப்பட்டது. பகிரப்பட்டது. 

    இச்சூழலில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய போட்டியின் போது ஃபிஃபா உலகக்கோப்பை குறித்து அதிகம் பேர் தேடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும்,  கூகுள் ட்ராபிக் நேற்று சாதனை படைத்துள்ளது என்றும், உலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றைப் பற்றி மட்டுமே தேடுவது போல இருந்ததாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

    தீபிகா மற்றும் ஷாருக்கானை ‘உணவுக்காக ஆடும் குண்டர்கள்’ என விமர்சனம் செய்த முதல்வர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....