Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தீபிகா மற்றும் ஷாருக்கானை 'உணவுக்காக ஆடும் குண்டர்கள்' என விமர்சனம் செய்த முதல்வர்..

    தீபிகா மற்றும் ஷாருக்கானை ‘உணவுக்காக ஆடும் குண்டர்கள்’ என விமர்சனம் செய்த முதல்வர்..

    உணவுக்காக ஆடும் குண்டர்கள் காவி உடை அணிந்துகொண்டு திரிகின்றனர் என ‘பதான்’ படத்தின் பாடல் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பேசியுள்ளார். 

    ஷாருக்கானின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து சில காலம் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிவிட்டது. 

    இதைத்தொடர்ந்து, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க பதான் என்ற திரைப்படமானது உருவாகியுள்ளது.இத்திரைப்படமானது அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

    படம் வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் பதான் திரைப்படத்திலிருந்து வெளிவந்த ‘பேஷாரம் ராங்’ பாடல் இணையத்தில் பெரும் ஹிட் அடித்தது. இதோடு, அப்பாடலில் தீபிகா படுகோனே காவி உடையில் அதீத கிளாமரில் ஷாருக்கானுடன் நடனமாடியிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பதான் திரைப்படத்தை புறக்கணிப்போம் என்ற வாதமும் ட்விட்டரில் எழுந்து வருகிறது.

    குறிப்பாக பாரதிய ஜனதா இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ‘பேஷாரம் ராங்’ பாடல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

    இது குறித்து அவர் பேசுகையில், ‘வாழ்க்கையில் அனைத்தையும் துறந்தவர்கள் காவி உடை அணிவார்கள். ஆனால், உணவுக்காக ஆடும் குண்டர்கள் (தீபிகா படுகோன்) காவி உடை அணிந்துகொண்டு திரிகின்றனர். மேலும், இவர்கள் பொதுமக்களிடமிருந்து பணம் பறிப்பதைத் தவிர பொதுமக்களுக்காக அவர்கள் எதைத் தியாகம் செய்தனர்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

    சண்டைப்போடும் நடிகர் மற்றும் விமர்சகர்.. ட்விட்டுகள் வைரல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....