Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாயுபிஐ செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு; ஒரு நாளைக்கு 20 முறைதானா?

    யுபிஐ செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு; ஒரு நாளைக்கு 20 முறைதானா?

    தேசிய கட்டணக் கழகம் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். சிறு தொகையில் ஆரம்பித்து பெரும் தொகை வரையில் இந்த பரிவர்த்தனை முறைதான் அதிகளவில் உபயோகிக்கப்படுகிறது. 

    இதற்கு உதவும் செயலிகளான கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற யுபிஐ செயலிகள் அதிகளவில் உபயோகிக்கப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தேசிய கட்டணக் கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது. 

    இச்சூழலில்தான், என்பிசிஐ யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த முடிவுகளின்படி, ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்கலாம் என்று எதிர்பாரக்கப்படுகிறது. 

    இந்த கட்டுப்பாடுகளில், ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். வங்கிகளின் கொள்கைகள் பொறுத்து பணபரித்தனையின் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....