Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு ஏற்றமா இறக்கமா? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு ஏற்றமா இறக்கமா? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வண்டி வாகனங்கள் வாங்க நல்ல நேரம். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அம்மன் வழிபாடு செய்வது நன்மையை பெற்றுத் தரும். 

    விருச்சிகம்: 

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக அளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறைய வாய்ப்பு உண்டு. அலுவலக பணிகளில் கவனமுடன் இருப்பது அவசியம். தொழிலில் கூடுதல் உழைப்பால் நல்ல பலன்களை பெறுவீர்கள். உங்கள் விடாமுயற்சியின் காரணமாக வெற்றிகளை குவிப்பீர்கள். ஆஞ்சநேய வழிபாடு மன தைரியத்தை அளிக்கும். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாட்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற வாய்ப்புண்டு. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். சிவனை நாள்தோறும் நினைப்பதால், நல்லெண்ணம் தோன்றும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகளும் தீமைகளும் கலந்து நடைபெறக் கூடிய நாட்களாக காணப்படுகின்றன. திருணமன காரியங்கள் கைகூடி வரும். நண்பர்களுடன் இணைந்து நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகத்தில் சிலருக்கு வேலைச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்து, மன அமைதியை காப்பது நல்லது. முருகன் வழிபாடு உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும். 

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நீங்கள் எதிர்பார்த்திராத நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையக்கூடும். அலுவலகத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும். தொழிலை விரிவுபடுத்த புதிய யோசனைகள் பிறக்கும். துர்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு மேலும் நன்மைகளைத் தரும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, சுறுசுறுப்பாக செயல்படுவதன் மூலம் வெற்றி காணும் நாட்களாக காணப்படுகின்றன. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை எடுக்க வாய்ப்பு உருவாகும். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....