Wednesday, March 27, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு ஏற்றமா இறக்கமா? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு ஏற்றமா இறக்கமா? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: 

    மேஷ ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, ஓரளவு நன்மையைத் தரக்கூடிய நாட்களாக இருக்கின்றன. பொறுமையை கடைபிடிப்பது நல்லது. குடும்ப பிரச்சனைகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்வழியை காட்டும். 

    ரிஷபம்: 

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, மகிழ்ச்சிகரமான நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாகவே அமைகின்றன. நண்பர்கள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. திருமண காரியங்கள் கைக்கூடி வரும். அலுவலகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். தொழிலில் முடிந்தவரை கவனமுடன் இருப்பது அவசியம். சிவனை நினைத்து வழிபாடு செய்வது சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 

    மிதுனம்: 

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த வந்த சண்டை விலகி நட்புக் கூடும். விழிப்புடன் இருந்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நல்ல சுமூகமான சூழ்நிலை நிலவும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு துணிவுடன் செயல்படக் கூடிய நாட்களாக அமைகின்றன. குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு மேலும் நன்மைகளை பெற்றுத் தரும். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. உறவுகளிடையே சில பிரச்சனைகள் தோன்றி மறையும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் அதிக நேரம் உழைக்க நேரிடும். சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். 

    கன்னி: 

    கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, ஓரளவு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். இருப்பினும் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புண்டு. பிள்ளைகளால் சில செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் வேலையை பிறர் பாராட்டுவர். தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. பெருமாளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....