Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு திரைப்படத்தின் 'இந்த' பாடல் எப்படியிருக்கும் தெரியுமா? - வெளிவந்த அப்டேட்..

    துணிவு திரைப்படத்தின் ‘இந்த’ பாடல் எப்படியிருக்கும் தெரியுமா? – வெளிவந்த அப்டேட்..

    துணிவு திரைப்படத்தின் ‘கெத்து’ எனும் பாடல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு, மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோரின் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படமானது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. 

    துணிவு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் துணிவு திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியாகிய ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளடா’ என்ற இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் 3-ஆவது பாடல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கெத்து’ என்ற பெயரில் அந்த பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இப்பாடல் குறித்து பிரபல நடன இயக்குநர் கல்யான் மாஸ்டர் தெரிவிக்கையில், “ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி கெத்து பாடலில் அஜித் சாரை புதிய ஸ்டைலில் காட்டியுள்ளோம். இந்தப் பாடலுக்கு தியேட்டரில் யாருடைய கால்களும் ஆடாமல் இருக்காது. இந்தப் பாடல்தான் தொடக்க பாடலாகவும் இருக்கும். நானும் இந்தப் பாடலில் கௌரவ தோற்றத்தில் வந்துள்ளேன்” என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால், ‘கெத்து’ பாடலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

    தீபிகா மற்றும் ஷாருக்கானை ‘உணவுக்காக ஆடும் குண்டர்கள்’ என விமர்சனம் செய்த முதல்வர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....