Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்வாழை இலை இவ்வளவு முக்கியமா? அப்போ, இனி வாழை இலைதான் !

    வாழை இலை இவ்வளவு முக்கியமா? அப்போ, இனி வாழை இலைதான் !

    முன்னோர்கள் வாழை இலையின் முக்கியத்துவம் அறிந்து தான், வாழையை நம் வாழ்வியலோடு இணைத்து வைத்துள்ளனர். சமைப்பதிலிருந்து உணவு பரிமாறுவது வரையில், வாழை இலைகள் பல வருடங்களாக தென்னிந்திய சமையலறைகளில் முக்கிய அங்கமாக திகழ்கிறது. உணவைப் பரிமாறும் நேரத்தில், வாழை இலைகள் அழகாய்த் தெரிவது மட்டுமல்லாது, அவை மட்கும் தன்மையுடையது. பிறகு, அவை விவசாயத்திற்குத் தேவையான உரம் தயாரிக்கப் பயன்படும்.

    வாழை இலையின் பயன்கள்:

    வாழை இலைகள், வேகவைத்த உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பூஜ்ஜிய எண்ணெய் சமையலைத் தருகிறது. சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள், வாழை இலையில் இருப்பதால், உடல் செல்களின் அழிவைத் தடுக்கவும், நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

    உணவை வாழை இலையில் வேகவைத்தால், பல நோய்களைத் தடுக்கும் பாலிபினால்களை உறிஞ்சுகிறது. வாழை இலையில் உணவருந்தினால், உடலில் பித்தத்தின் அளவை குறைப்பதோடு, உயர் இரத்த அழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண் மற்றும் தோல் நோய்களின் தீவிரம் குறையும். வாழை இலையில் உண்பதால், பித்தம் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும். உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேற்றப்பட்டு, உடல் தூய்மையடையும்.

    தென்னிந்தியாவில், வாழை இலைகள் உணவு பரிமாற அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாழை இலையானது, உணவுக்கு ஒரு வித வாசனையை அளிக்கிறது. உணவின் சுவையை மேலும் மேம்படுத்துகிறது. சூடான உணவை இலையில் போட்டு சாப்பிடும் போது, பசுமையான குளோரோஃபில் உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

    வாழை இலையில் உண்ணும் போது சம்மணமிட்டால், வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறு வயதிலிருந்தே, வாழை இலையில் சாப்பிடும் நல்ல பழக்கத்தை குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், செரிமானம் தொடர்பான நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும்.

    வாழை இலையை சேமிக்கும் முறை:

    புதிய வாழை இலைகள் உங்களிடம் இருந்தால், அதனை சேமித்து வைக்க, வாழை இலைகளை சுத்தம் செய்து, நன்கு உலர்த்தி அதன்பிறகு, காற்று புகாத பிளாஸ்டிக் பையில் சேமித்து வைக்கலாம்.

    இப்போது பையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டால், நீங்கள் வாழை இலையை சில மாதங்கள் வரை சேமிக்க முடியும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....