Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? ஜெயக்குமார் வெளிப்படைப் பேச்சு!

    கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? ஜெயக்குமார் வெளிப்படைப் பேச்சு!

    தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே இரட்டைத் தலைமை நீடித்து வருகிறது. ஒருபறம் எடப்பாடி பழனிச்சாமியும், மறுபுறம் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக தலைமையை கைப்பற்ற நினைக்கின்றனர்.

    இந்நிலையில், இருவருடைய ஆதரவாளர்களும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், சிலர் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கட்சியில் உள்ள பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், அதனை கட்சித் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுவதற்கு, முக்கிய காரணம் ஜெயக்குமார் தான் என ஓபிஎஸ் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசிக்க, அதிமுக தலைமை அலுவலகம் வரும் ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

    மேலும், அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகிறார்கள். இத்துடன் இன்று காலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் இரு தரப்பினரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளதால், அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை அதிமுக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து, இன்று 3 ஆம் கட்டமாக ஆலோசித்தோம்.

    கட்சியின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், தொண்டர்களின் உணர்வைத்தான் நான் பிரதிபலித்தேன். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பேசப்பட்டதை நான் வெளியில் தெரிவித்தேன் அவ்வளவு தான். சிதம்பர ரகசியத்தையா நான் போட்டு உடைத்தேன்? பெரும்பான்மை அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை வேண்டுமென கேட்டார்கள்.

    அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதைத்தான் நானும் சொன்னேன். இதில் தவறென்ன உள்ளது? அதிமுக ஒற்றைத் தலைமை கோரிக்கை என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. கட்சிக்கு தேவையானது ஒற்றைத் தலைமையா அல்லது இரட்டை தலைமையா என்பதை மாவட்ட செயலாளர்களே முடிவு செய்வார்கள். ஒற்றைத் தலைமை கோரிக்கையானது ரகசியமானதல்ல. இது அதிமுக தொண்டர்களின் கோரிக்கை. என்னிடம் யாரும் பூச்சாண்டி காட்ட முடியாது. நான் பூச்சாண்டி காட்டினாலும் பயப்படமாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; அப்போ தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய்லாம் எப்படி வாங்கனும்? படிங்க வாங்குங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....