Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கட்சியினரிடையே கலகலப்பு; பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ள ஒற்றைத் தலைமை!!

    கட்சியினரிடையே கலகலப்பு; பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ள ஒற்றைத் தலைமை!!

    ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.

    நாளுக்கு நாள் அதிமுகவினரிடையே ஒற்றை தலைமை குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் என்கிற பதவிக்கு உரிமைகோராமலே இருந்தது. 

    கட்சியினை வழிநடத்திட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களாக கட்சி நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகம் தோன்றி வந்தன. கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையென ஒரு சாராரும், ஒற்றைத்தலைமை என்பது கட்சிக்கு செய்யும் துரோகம் என ஒரு சாராரும் பல காலங்களாக பிரிந்து தங்களது வாதங்களைத் தெரிவித்து வந்த வண்ணமிருந்தனர்.

    இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) அன்று நடைபெற்றது. 

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஒற்றைத்தலைமை குறித்த விவாதமானது இங்கும் எழுந்ததால் கூட்டத்தினரிடையே சலசலப்பு உண்டானது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே தலைமை பற்றி பேசத்துவங்கியது மட்டுமல்லாமல், ஆதரவு வாக்குகளையும் திரட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்தினை பேசித் தீர்க்க இன்று ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தீர்மான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த ஏற்பாட்டினையொட்டி தலைமை அலுவலகத்தின் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். அதுமட்டுமின்றி இரண்டு அணியாகப் பிரிந்த அவர்கள் கோஷங்களை எழுப்பவும் செய்தனர்.

    இதனிடையே பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான மாரிமுத்து என்பவர் தீர்மானக் கூட்டத்திலிருந்து ரத்தக் காயத்துடன் வெளியில் வந்தார். நிருபர்களிடம் பேசிய அவர், ‘எடப்பாடி ஆளா என்று கேட்டு அடிக்கிறார்கள்.’ என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு மாரிமுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குச் சென்றுள்ளார். மரிமுத்துவிடம் தகவல்களைக் கேட்டறிந்த பழனிசாமி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

    மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் வந்தவண்ணமுள்ளனர். முன்னாள் அமைச்சர்களான பெஞ்சமின், மாதவரம், மூர்த்தி, தங்கமணி, விஜயபாஸ்கர், கே.பி.கந்தன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.

    ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்க இவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளதாகக் கருதப்படுகிறது. 

    அதிமுக கட்சியில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பரபரப்பான சம்பவங்கள் கட்சித் தொண்டர்களிடையே பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி அந்தக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் மனதிலும் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

    கார்த்திக்-பாண்டியா அபாரம், தென்னாப்பிரிக்கா அணியினை வீழ்த்தி வெற்றி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....