Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்எலும்பு ஆரோக்கியம், எலும்புப் புரை....இன்னும் பல எலும்பு சார்ந்தவைகளுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க!

    எலும்பு ஆரோக்கியம், எலும்புப் புரை….இன்னும் பல எலும்பு சார்ந்தவைகளுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க!

    எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ள பழங்களை சேர்க்க வேண்டும். உங்கள் எலும்பு வலிமையை உறுதியாக்கும் பழங்கள் என்ன என்பதை இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

    எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.

    சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது. மூட்டுகள் மற்றும் எலும்பில் வலி ஏற்பட்டால் அது நம் தினசரி வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கும். எலும்பு மெலிதல் அல்லது எலும்புப் புரை என்று கூறப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எலும்புகளை பலவீனப்படுத்தும் நோயாகும்.

    பழைய எலும்பு திசுக்களுக்குப் பதிலாக நம் உடலில் புதிய எலும்பு திசுக்கள் நிரப்பப்படும். ஆனால், எலும்புப் புரை பாதிப்பு ஏற்பட்டால் புதிய எலும்பு உருவாதல் தாமதமாகும். ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புள்ளவர்களுக்கு எலும்பு விரைவிலேயே சேதமடையும். ஆனால், எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால் குணமாவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். எலும்புக்கு பலம் அளிக்கக்கூடிய சில பழங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புப் புரை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளலாம்.

    அன்னாசி பழம்:

    அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் நம் உடலிலுள்ள அமில தன்மையை சமன்செய்யும். அதன் காரணமாக கால்சியம் இழப்பு தவிர்க்கப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் அன்னாசிப்பழத்தில் உள்ளன. இவை எலும்பை உறுதியாக்கக்கூடியவை. ஆகவே, அன்னாசிப் பழம் சாப்பிடுவது எலும்பை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும்.

    பப்பாளி பழம்:

    கோடைக்காலத்தில் நமக்கு இதமளிக்கக்கூடிய பழங்களுள் பப்பாளியும் ஒன்று. பப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது எலும்புக்கும், தோலுக்கும் நன்மை செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

    தக்காளி பழம்:

    எலும்பில் ஏற்படும் குறைகளை சரிசெய்யும் தன்மை தக்காளிக்கு உள்ளது. இது எலும்பின் நிறையை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் கே, கால்சியம் மற்றும் லைகோபீன் ஆகியவை தக்காளியில் உள்ளன. இவை எலும்புக்கு பலம் அளிக்கின்றன.

    ஆப்பிள் பழம்:

    ஆப்பிள் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழமாகிவிட்டது. ஆப்பிளில் கால்சியம், வைட்டமின் சி ஆகியவை உள்ளன. கால்சியம் எலும்பின் அடிப்படை சத்து ஆகும். வைட்டமின் சி புதிய எலும்பு உருவாவதை தூண்டக்கூடிய கொலேஜன் என்ற புரதம் உற்புத்தியாக உதவுகிறது.

    ஸ்ட்ராபெர்ரி பழம்:

    நம் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் ஸ்ட்ராபெர்ரியில் உள்ளன. கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் கே மற்றும் சி ஆகியவையும் புதிய எலும்பு உருவாக உதவுகின்றன.

    ஆரஞ்சு பழம்:

    புளிப்பும், இனிப்பும் கலந்த இந்த பழம் அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்று. ஆரஞ்சு சுளைகளிலிருந்து சாறு பிழிந்து சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

    ஆரஞ்சு சாறு உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி இரண்டையும் வழங்குகிறது. இதன் மூலம் எலும்பு வலிமைக்கும் வலு சேர்க்கிறது. ஆரஞ்சு பழச்சாற்றை தவறாமல் எடுத்துகொள்வதன் மூலம் ஆஸ்டியோபொராசிஸ்யை தடுக்கலாம்.

    வாழைப்பழம்:

    வாழைப்பழம் உடலுக்கு செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க செய்கிறது. வாழைப்பழம் மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரமாகும். எலும்பு மற்றும் பற்களின் அமைப்பு வளர்ச்சியில் ஊட்டச்சத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது பலவீனமான எலும்புகளை அகற்றும். வாழைப்பழம் மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரம்.

    கிவி பழம் :

    பழங்களில் கிவி பழம் முக்கியமானது. கிவியில் அதிக அளவு கால்சியம் உள்ளது. பற்களின் அமைப்பு மற்றும் ஆஸ்டியோபொராசிஸை தடுக்க உதவுகிறது. இது எலும்பை வலிமையாக்க செய்கிறது.

    உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பது எப்படி என்று நீங்கள் யோசித்தால் உங்களுக்கு இந்த பழங்கள் நிச்சயமாக உதவும். இதை அன்றாட உணவில் சேர்க்க தொடங்குங்கள்.

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; அப்போ தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய்லாம் எப்படி வாங்கனும்? படிங்க வாங்குங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....