Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்.....' - எலான் மஸ்க் பதிவால் அதிர்ந்த ட்விட்டர்!

    ‘நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்…..’ – எலான் மஸ்க் பதிவால் அதிர்ந்த ட்விட்டர்!

    எலான் மஸ்க் செய்த ட்விட்டால், ட்விட்டர் தளமே அதிர்ந்துள்ளது. அப்படி என்ன கூறினார்? ஏன் கூறினார்? என்று பார்ப்போம். 

    எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து வாங்கினார். இதன் இந்திய மதிப்பு 3 லட்சத்து 30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது ட்விட்டர் தளத்தில் கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தார், எலான் மஸ்க்.

    இந்நிலையில், உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க்கை, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அச்சுறுத்தும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷ்யா கைப்பற்றிய மரியுபோல் நகரில், உக்ரைன் இராணுவத்திற்கு உதவும் வகையில் எலான் மஸ்க், அவரின் ஸ்டார் லிங்க் இணைய வழிச் சேவையை அளித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், அதற்கு தேவையான உபகரணங்களை அமெரிக்கா வாங்கி தந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். எலான் மஸ்க் இப்படி செய்ததற்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று எலான் மஸ்க்கின் ட்விட்டர் தளத்திலேயே இவர் எச்சரித்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. 

    இதனையடுத்து எலான் மஸ்க், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி தலைவரின் கருத்திற்கு பதில் அளிப்பது போல், நான் மர்மமான முறையில் இறந்துவிட வாய்ப்புள்ளதாகவும் அதனால் இப்போதே அனைவருக்கும் குட் பை சொல்வதாகவும் வேடிக்கையாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். 

    இதற்கு எலான் மஸ்க்கின் கணக்கை பின்தொடர்ந்து வரும் பயனர்கள், நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  

    ஸியோமியிடம் இருந்து ரூ.5,551 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை மிரட்டல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....