Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதைப் பற்றி மட்டும் திமுக அரசு வாயை திறக்காதா? - விமர்சித்த எல்.முருகன்!

    அதைப் பற்றி மட்டும் திமுக அரசு வாயை திறக்காதா? – விமர்சித்த எல்.முருகன்!

    தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு ஆகிய நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஓராண்டு முழுமை பெற்றும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்கிறது என்று பா.ஜ.க.-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

    எல்.முருகன் விமர்சனம் ; 

    தூத்துக்குடி விமான நிலையத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசுகையில், தமிழக மக்களுக்கு, தமிழக அரசு சொன்ன தேர்தல் வாக்குறுதிகளில், சொன்னதை செய்வதற்கு தவறி விட்டார்கள்.

    சில பொய் மிகுந்த வாக்குறுதிகளை சொல்லி, ஓட்டுகளை வாங்கிவிட்டு ஒரு ஆண்டு முடிந்தும் கூட, தேர்தல் வாக்குறுதி குறித்து மௌனம் சாதிப்பது கண்டனத்துக்கு உரியது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் கொடுப்போம் என்றனர். ஆனால், அது குறித்து எந்த இடத்திலும் திமுக வாயை திறப்பதில்லை.

    திராவிட மாடல் என சொல்லும் திமுக ஆட்சியில் தான், பல கிராமங்களில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. பல கிராமங்களில் தனித் தனியான மயானங்கள் உள்ளன. இது தான் தற்போது திராவிட மாடல் அரசாக உள்ளது. சமுத்துவம் உள்ளதாக இவர்கள் பொய் சொல்கின்றனர். என்ன சமத்துவம் இருக்கிறது இங்கே? தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி மற்றும் நகைக்கடன் தள்ளுபடி அவை எல்லாம் காற்றிலே பறந்து கொண்டு இருக்கிறது. சாத்தியமில்லாத பல வாக்குறுதிகளை அளித்து உள்ளனர். பொய்யான தேர்தல் அறிக்கைகளை கொடுத்து பிறகு, ஆட்சிக்கு வந்தபின் அதனை மறந்து விடுவது தான் திமுக.வின் வாடிக்கை. அதைத் தான் திமுக செய்துக் கொண்டு உள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசுக்கு உட்பட்டு நடக்கிறது. இதில், எப்படி மத்திய அரசு வந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. மத்திய அரசுக்கும், மாநிலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி வரி விதிப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் ஏழை மக்கள் மீது 100% வரி என்பது திணிக்கப்பட்டு இருப்பது தவறான செயல்.

    நிலக்கரி குறித்து, மத்திய அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். நிலக்கரி தட்டுபாடு என்பது இல்லை, மேலும் தமிழ்நாடு அரசு கேட்டதை விடவும் அதிகமான நிலக்கரியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆங்காங்கே லாக் அப் மரணங்கள் அதிகமாக நடக்கிறது. பல இடங்களில் மகளிருக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    சர்வதேச நிலைக்கு ஏற்பவே கேஸ் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் உள்ளது. ஒரு நேரத்தில் அதிகரித்தும், ஒரு நேரத்தில் குறையவும் செய்கிறது. அதே நேரத்தில் குறைவான மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு, பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதிப்பது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

    தொடர்ந்து இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த அரசு சமமான அரசாக இருக்க வேண்டும். ஒரு அரசாங்கம், ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கக் கூடியது. இது இந்து மக்களை கோபப்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் இதற்கு தக்கப் பதிலடி கொடுப்பார்கள் என்று எல்‌.முருகன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழக அரசு பட்டினப் பிரவேசத் தடையை திரும்ப பெற்றிருப்பது இந்து மதத்தினருக்கும், மதுரை மற்றும் தருமபுர ஆதினத்திற்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

    வருகிறது அசானி புயல்: தமிழகத்தில் எங்கெங்கு மழை வெளுத்து வாங்கும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....