Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்இன்றைய விவசாயிகள் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளை என்னவென்று காண்போம்!

    இன்றைய விவசாயிகள் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளை என்னவென்று காண்போம்!

    இன்றைய விவசாயிகள் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்: 

    விவசாயிகள் பற்றியும், விவசாயம் பற்றியும் அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ள இந்த காலகட்டம் மிக முக்கியமானது. எனவேதான், இந்த கட்டுரை மிக முக்கியமானது.

    ஏனெனில் இதுவரை பலருக்கும் விவசாயிகள் சந்திக்கும் சிக்கல் தெரியாது. விவசாயத்திற்கு என்ன தேவை என்றும் தெரியாது. விவசாயத்திற்கு தன்னால் என்ன பங்களிப்பு செய்திருக்க முடியும் என்றும் தெரிந்திருக்காது. அனைவருக்குமான செய்தியைச் சொல்லும் ஒரு கட்டுரை இது.

    உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.

    இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்ய இயற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.

    விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்?
    • விலை நிர்ணயம்
    • விவசாயிகளுக்குக் குறைந்த ஊதியம்
    • கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு சரிவு
    • மாறிவரும் பருவ நிலை
    • விவசாய தொழில் முனைவோர் குறைவு
    • குறைந்து வரும் விவசாய நிலம் மற்றும் நீர்
    ஒழுங்குமுறை இல்லாத விவசாயத்தால் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்:
    • ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்.
    • குறைந்து வரும் விவசாய நிலத்தால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை.
    • அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை.
    • செயற்கை உரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுள்ள விவசாயப் பொருட்களால் ஏற்படும் உடல்நலக்குறைவு.
    • தரமற்ற குடிநீர்.
    விதைகளின் தரம்:

    விவசாயிகளுக்கு முதலில் தரமான விதை கிடைப்பது மிக முக்கியமானது. அதுவே தரமான பொருளை விளைவிக்க ஏற்றது. ஆனால் எந்த விதை தரமானது என்பதை உற்பத்தியைக்கொண்டே தீர்மானிக்க முடியும். அதற்கு தற்போது உள்ள பிளாக்செயின் தொழில்நுட்பம் ஏற்றது.

    2018 டிசம்பரில் விவசாய வேலையாட்களுக்குச் சம்பளம் 299, கட்டிட வேலையாளுக்கு ரூ. 332, வேலையாளுக்கு ரூ.429, கொல்லருக்கு ரூ.351, பிளம்பருக்கு ரூ.443, எலக்ட்ரீசியனுக்கு ரூ.427ம் வழங்கப்படும் சராசரி. எனவே விவசாயிகளுக்கும் ஊதியத்தை அதிகரிக்கவேண்டும்

    விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமான அளவு செயற்கை உரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் உள்ள ஏதோ ஒரு இரசாயனம் மனித உடலில் சில உறுப்புகளைப் பாதிக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

    எனவே, விவசாயம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கே மிக அத்தியாவசியமான ஒன்று. அதை நாம் பேணிக்காக்கவேண்டும். ஆனால் மாறாக நாம் விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கவேண்டும் என்று பெயருக்குச் சொல்லிவிட்டுப் பயணிக்கிறோம்.

    எனவே விவசாயிகளையும், விவசாயத்தொழில் முனைவோர்களையும் நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

    திமுக “போட்டோ சூட்” அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது – விஜய பிரபாகர் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....