Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா7000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு - தொல்லியல் துறை சாதனை!

    7000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறை சாதனை!

    இந்திய தொல்லியல் துறை ஹரியானாவின் உள்ள ராக்கிகர்கி பகுதியில் புதிய அகழாய்வு பணியைத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில், சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு பழமையான நகர் ஒன்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

    தற்போது ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க, அரசு நடந்து வருகிறது. இங்குள்ள ராக்கிகர்கி கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், ஹரப்பா நாகரிகம் குறித்து, பல புதிய தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

    சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கு அடுத்து, சிந்து சமவெளியில் தழைத்திருந்த ஹரப்பா நாகரிகமே, உலகின் மூன்றாவது பெரிய நாகரிகமாக கருதப்படுகிறது. இது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது.

    நம் நாட்டில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், சில தகவல்கள் கிடைத்தாலும், ஹரியானாவின் ஹிசார் மாவட்டம் ராக்கிகர்கியில் தான் அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    ancient அதுமட்டுமின்றி 7,000 ஆண்டுகளுக்கு முன்பே, நகரப் பகுதிகள் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. கட்டுமானத் தொழில் நுட்பங்களும் மேம்பட்டதாகவே இருந்துள்ளன. இங்கு, 5,000 ஆண்டுக்கு முன், ஒரு தங்க நகை தொழிற்சாலை செயல்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், மனித எலும்புக் கூடுகள், ஹரப்பா நாகரிகத்தின் போது மக்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கிடைத்துள்ளன.

    இந்நிலையில், புதிய ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை விரைவுபடுத்தி உள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்களை மக்கள் காண்பதற்காக காட்சிக்கு வைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

    தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....