Tuesday, May 16, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிறந்து நூறு நாட்களுக்குப் பிறகு ஐசியூ-வில் இருந்து வீட்டிற்கு வந்த பிரியங்கா சோப்ராவின் மகள்! -...

  பிறந்து நூறு நாட்களுக்குப் பிறகு ஐசியூ-வில் இருந்து வீட்டிற்கு வந்த பிரியங்கா சோப்ராவின் மகள்! – நெகிழ்ச்சி பதிவு!

  பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல பாடகரான நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

  பிரியங்காவைவிட நிக் 10 வயது இளையவர் என்பதால் இவர்களது திருமணம் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வயது வித்தியாசம் காரணமாகவே விரைவில் இந்த ஜோடி பிரிந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

  ஆனால், காதலுக்கு வயது வித்தியாசம் தடை இல்லை என்பதைத் தங்களது பல பதிவுகளின் மூலம் புரியவைத்து இந்தச் சர்ச்சைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

  திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் தங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்த தம்பதி தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தது.

  இதனைத் தொடர்ந்து இப்போது அன்னையர் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக ப்ரியங்கா- நிக்ஸ் தம்பதி தங்களது குழந்தையுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை நேற்று இரவு பகிர்ந்துள்ளனர்.

  அதில், ” இந்த அன்னையர் தினத்தில் நாங்கள் சொல்வது இதுதான். கடைசி மூன்று மாதம் எங்களுக்கு ரோலர் கோஸ்டரில் பயணம் போல தான் அமைந்தது. இதனை பலரும் அனுபவித்து இருப்பீர்கள்.

  நூறு நாட்களை கடந்த பிறகு ICU-ல் இருந்த இந்த சிறிய பெண் குழந்தை வீட்டிற்கு வந்தடைந்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்துவமானது. எங்களுக்கும் கடந்த சில மாதங்கள் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.

  எங்கள் குழந்தை வீட்டுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தில் அவளுக்கு சிகிச்சை அளித்த அனைத்து டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அம்மா, அப்பாவாக எங்களது புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. என்னை அம்மா ஆக்கிய நிக் ஜோனாஸுக்கு எனது நன்றி, லவ் யூ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

  இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....