Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவா?

    இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவா?

    இயக்குநர் ஷங்கர், தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படமும் இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ‘அந்நியன்’ ரீமேக்கையும் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தன.

    இதில் ராம் சரண் படம் ஆரம்பமானது. தில் ராஜூ தயாரிக்கிறார். ‘RRR’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு இந்தப் படத்தில் கலந்துகொண்டார், ராம் சரண். ராம்சரணின் 15வது திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

    இப்படத்திற்கு ஜானி மாஸ்டர் நடனத்திற்கான கொரியோஃகிராபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், இந்தப் படத்தில் ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, நியூ திரைப்படத்தில் ஹீரோவாக தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டி இருந்தார்.

    சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. இந்த திரைப்படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

    இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா RC15 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறு கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது.

    பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதியிலிருந்து ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    அறியக் கூடியவையாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் அழகிய இடங்கள்; வாங்க பார்க்கலாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....