Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்அசத்திய எச்.டி.எப்.சி. நிறுவனம்; நிகர இலாபம் இவ்வளவு கோடியா?

    அசத்திய எச்.டி.எப்.சி. நிறுவனம்; நிகர இலாபம் இவ்வளவு கோடியா?

    அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    • எச்.டி.எப்.சி. நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,700 கோடி ஈட்டியுள்ளது.
    • இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும்.
    • 2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,180 கோடி ஈட்டியிருந்தது.
    • 2022 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,601 கோடியாக உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும்.
    • அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,027 கோடி ஈட்டியிருந்தது.
    • எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்துள்ளது.
    • கடந்த மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் மொத்த தனிநபர் வாராக் கடன்கள் 1.44 சதவீதமாகவும், மொத்த தனிநபர் அல்லாத வாராக் கடன்கள் 5.04 சதவீதமாகவும் உள்ளது.
    • மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.டி.எப்.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.37 சதவீதம் உயர்ந்து ரூ.2,214.30ஆக இருந்தது.
    • முடிவாக எச்.டி.எப்.சி. நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,700 கோடி ஈட்டியுள்ளது.
    • 7000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறை சாதனை!
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....