Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்அறியக் கூடியவையாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் அழகிய இடங்கள்; வாங்க பார்க்கலாம்!

    அறியக் கூடியவையாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் அழகிய இடங்கள்; வாங்க பார்க்கலாம்!

    அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. தனியாக பிரிந்தாலும் அரியலூர், செந்துறை மற்றும் உடையார் பாளையம் ஆகிய மூன்று வட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டத்தில் வரலாற்று மிக்க சிறப்பு சுற்றுலாத்தளங்கள் காணப்படுகின்றன. இப்பகுதி சோழர்களின் சொர்க்க பூமியாக விளங்கியுளளது. அரியலூர் மாவட்டம் சென்னையிலிருந்து 254 கி.மீ தொலைவில் உள்ளது. 

    கங்கைகொண்ட சோழபுரம்: 

    அரியலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய சுற்றுலாத்தளம் கங்கை கொண்ட சோழபுரம். வடநாட்டு போரில் அடைந்த வெற்றியின் காரணமாக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசரான முதலாம் இராஜேந்திரர். இந்தக் கோயில் தஞ்சை பெரிய கோவிலின் கட்டடக்கலை போன்றே காணப்படும்.

    இதற்கு காரணம், இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே கட்டவேண்டும் என்று எண்ணிக் கட்டினார். இங்கு பெரிய நந்தியும் நாட்டியமாடும் விநாயக சிற்பமும் மற்றும் பல்வேறு விதமான சிற்பங்களும் பார்க்க தக்கவை. இதுமட்டுமல்ல, சிங்கம் தலை கொண்ட கிணறு மற்றும் முதலாம் சோழ அரசரான இராஜேந்திர சோழனுக்கு பார்வதி பரமேஸ்வரர் இருவரும் முடி சூட்டுவது போன்ற சிற்பங்கள் பார்ப்பதற்கு இன்னும் கொள்ளையழகு. ariyalur 

    ஏலாக்குறிச்சி- அடைக்கலமாதா கோயில்: 

    ‘தேம்பாவணி’ நூலை எழுதிய வீரமாமுனிவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இந்தக் கோவில் 1711 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இங்குள்ள அடைக்கலமாதா சொரூபம் லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த கோவிலானது பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் திருச்சியிலிருந்து 85 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 375 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த தேவாலயத்தை, தமிழ்நாடு அரசு 2001 ஆம் ஆண்டு சுற்றுலாத்தளமாக அறிவித்தது. இந்தக் கோயிலுக்கு சோழ மன்னன், நிலக்கொடை அளித்ததாக கல்வெட்டு ஒன்று இருப்பது பெருஞ்சிறப்பு. 

    மாளிகை மேடு: 

    கங்கை கொண்ட சோழ புறத்திற்கு அருகில் உள்ளது இந்த மாளிகை மேடு. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளது. தொல்லியல் அகழ்வாய்வுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் பெருமையை பறை சாற்றுகின்றன. இந்த இடம் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான இடமாகும். 

    காரைவெட்டி பறவைகள் சரணாலயம்: 

    மனதை மாற்றும் பறவைகள் ரீங்காரம் கேட்க வேண்டுமா? அப்போது இந்த இடத்திற்கு சென்று வாருங்கள். தஞ்சாவூரிலிருந்து வடக்கே 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காரைவேட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்த நிலப்பரப்பு 454 ஹெக்டேர் ஆகும். காலிமர் பறவைகள் சரணாலயத்திற்கு அடுத்து, நீர்ப்பறவைகள் அதிகம் வரும் சரணாலயம் தான் இந்த காரைவெட்டி. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதக் காலங்களில் இங்கு சென்றால் நீரில் வண்ண ஓவியங்களைக் காணலாம். 

    திருமானூர்: 

    திருமான் என்ற ஊர் திருமானூர் ஆகும். கலைமானுடன் நடராசர் நாட்டியம் ஆடியதாக உள்ளூர் புராணக் கதைகள் கூறுகின்றன. அதனால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இராஜராஜ சோழன், பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்கு செல்லும் வழியில் 20 அடி உயரமுள்ள சிலையை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. வருடத்தின் ஒரு சில நாட்களில், சூர்ய கதிர்கள் கோயிலின் கர்ப்ப அறைக்குள் விழுவது இங்கு சிறப்பாகும். 

    திருமழப்பாடி: 

    திருமழப்பாடி வரலாற்று சிறப்புமிக்க கோயில் தளங்களுள் ஒன்றாகும். இந்த ஊரிலும் புராணக் கதை ஒன்று கூறப்பட்டுள்ளது. தாளவனம் என்று அழைக்கபெற்ற இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றொரு பிரபஞ்ச நடனத்தை ஆட நடராசர் வாக்கு தந்ததாகவும், அவர் சிதம்பரத்தில் நடராசர் ஆடியதை காணமுடிவில்லை என்பதால் தான் இங்கு ஆடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த ஊர் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்தக்கோயில் குளத்தில் குளித்தால், தொழுநோய்கள் தீரும் என்பதும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கை ஆகும். 

    காமரசவல்லி: 

    காமரசவல்லி கோயில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது ஆகும். அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் காமரசவல்லி கோயில் உள்ளது. சோழ மன்னன் கட்டிய கோவில் என்பதால், இந்தக் கோவிலில் ஏராளமான சோழர் காலத்தை சேர்ந்த ஆதாரங்கள் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இங்கு அப்பர் சுவாமிகள் மேளத்துடன் சாக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார். 

    ஜெயங்கொண்டம்: 

    ஜெயங்கொண்டம் என்றால் தான் இப்போது நன்றாக தெரியும். ஆனால், இந்த ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம். இங்குள்ள சிவன் கோயிலின் தலவிருட்சம் நெல்லி மரம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்கிறார்கள். இராஜேந்திரர் சோழன், தனது தலைநகரை கங்கை கொண்ட சோழ புறத்திற்கு மாற்றுவதற்கு முன்னால், இந்த ஊருக்கு ஜெயங்கொண்டம் என்று பெயர் சூட்டியதாக சொல்லப்படுகிறது. கங்கை கொண்ட சோழ புறத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் ஜெயங்கொண்டம் உள்ளது. 

    கல்லன் குறிச்சி கோயில்:

    இந்த இடம் ஒரு சிறுகிராமம் ஆகும். ஆனால், பொதுவாக எல்லா ஊர் மக்களுக்கும் மிகவும் தெரிந்த கோயிலான கலியுக வரதராஜ பெருமாள் கோயில் இங்கு தான் உள்ளது. இக்கோயில் அரியலூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. 

    மேலப்பழுவூர்: 

    அரியலூர்- திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த மேலப்பழுவூர். இங்கு குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் உள்ளது. மேலும் இந்த இடம் தமிழ்த் துறவிகளின் சரணாலயமாக திகழ்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, பழுவேட்டரையரின் தலைமையகமாக இந்த மேலப்பழுவூர் விளங்கியுள்ளது வரலாற்று சிறப்பு மிக்கதாகும். 

    சோழர்களின் சொர்க்கமான அரியலூருக்கு சென்றால் நாமும் நிம்மதி சுற்றி பார்த்துவிட்டு வரலாம். 

    ஏன் வாசலில் கோலம் போடுகிறோம்? கோலம் உணர்த்தும் அறிவியல் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....