Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை!

    தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை!

    தக்காளி வைரஸ் குறித்து, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

    நேற்று சேலம் மாவட்டம், அஸ்தம் பட்டிக்கு அருகில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணனும் சென்றிருந்தார். 

    நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஷவர்மா சாப்பிட்டு கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த உணவு மேலை நாட்டு உணவு. அங்கு இந்த உணவு கெடாது, ஆனால் இங்குள்ள தட்பவெப்பநிலைக்கு உடனே கெட்டுவிடும். இளைஞர்கள் இதை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் நிறைய கடைகள் வருகிறது. இந்த உணவை பதப்படுத்த முடியுமா என்று தெரியாமல் விற்கிறார்கள். இதனால், தமிழகத்தில் 1000 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துயரை மூலம் ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளோம் என்று கூறினார். மேலும் அவர், மக்கள் நம் உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும், இந்த உணவுக்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து  வருகிறோம் என தெரிவித்தார். 

    இதையடுத்து செய்தியாளர்கள், தக்காளி வைரஸ் குறித்து கேள்விகளை எழுப்பினர். அப்போது மா சுப்பிரமணியன், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் கேரள அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். இதைப்பற்றி அவரே கூறுவார் எனக் தெரிவித்தார். 

    அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், கேராளாவில் தக்காளி வைரஸ் என்று சொல்லப்படுவது புதிய வைரஸ் இல்லை என்றும் சிக்குன்குனியா போன்று நல்ல நீரில் உருவாகும் கிருமிகள் தான் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், கன்னத்தில் சிவப்பாக தழும்பு வருவதால் அதற்கு தக்காளி வைரஸ் என்று பெட் நேம்(pet name) வைத்துள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து, தமிழகத்தில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பயப்பட தேவையில்லை தக்காளிக்கும் இந்த வைரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்தார். 

    ‘இது பெயரு அசைவ உணவுதான்.. ஆனா, இதுல அசைவம் இல்ல’ – உணவுத்துறையில் புதிய மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....