Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைவருகிறது அசானி புயல்: தமிழகத்தில் எங்கெங்கு மழை வெளுத்து வாங்கும்?

    வருகிறது அசானி புயல்: தமிழகத்தில் எங்கெங்கு மழை வெளுத்து வாங்கும்?

    தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல், தீவிர புயலாக உருமாறி வடக்கு ஆந்திர மற்றும் ஒடிசா ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதனால் மத்திய வங்கக் கடல் பகுதியில் 115 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது. மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. 

    தென்கிழக்கு பகுதியில் நேற்று அசானி புயல் உருவானதாக வானிலை மையம் தெரிவித்தது. மேலும் விசாகப்பட்டினத்தில் இருந்து 550 கிமீ தொலைவில் இந்தப் புயல் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆந்திர மற்றும் ஒடிசா வங்கக் கடல் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வட ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியில் வருகின்ற மே 10 தேதி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அசானி புயல் கரையை கடக்க வாய்ப்பில்லை எனவும் அடுத்த 2 நாட்களில் இந்தப்புயல் வலுவிழந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    மேலும் அசானி புயல் கிழக்கு கடற்கரைக்கு இணையாக நகர்ந்து மழைக்கான வாய்ப்பை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர ஆந்திர மற்றும் ஒடிசா நோக்கி, 25 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் படிப்படியாக குறைந்து 48 மணி நேரத்தில் குறைந்த வலுவிழந்த புயலாகவும் மாற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உட்பட  3 மாநிலங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    அசானி புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் டெல்டா மாவட்டங்கள் உட்பட, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    திமுக “போட்டோ சூட்” அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது – விஜய பிரபாகர் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....