Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரத்தில் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கலாம்; துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

    இந்த வாரத்தில் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கலாம்; துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

    துலாம்:

    உங்கள் செயல்களைச் சிறந்த முறையில் செய்ய உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுவது அவசியம். கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.

    பணியிடத்தில் அபாரமான வெற்றி கிடைக்கும். உங்கள் பணியில் கூடுதல் பலன்களும் கிடைக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஸ்திரமான நிதிநிலை காணப்படும்.

    உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

    மகிழ்ச்சியின் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

    விருச்சிகம்:

    சவால்கள் மிகுந்த வாரம். எனவே அமைதியாக எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பணிகள் இறுக்கமாக காணப்படும். இன்று திட்டமிட்டு தொழில் சார்ந்த முறையில் பணியாற்றினால் சிறந்தது.

    நிதி வளர்ச்சி திருப்தியை அளிக்கும். கணிசமான தொகை சேமிப்பீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள். இதனால் உங்கள் இருவரிடையே நெருக்கம் காணப்படும்.

    நீங்கள் மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பீர்கள். அதன் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    தனுசு: 

    சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லுங்கள். உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரும்பியதை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

    உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமை வெளிச்சத்திற்கு வரும். வெளி நாட்டிலிருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு தேவைப் படும் பொழுது அந்தப் பணம் கிடைக்கும்.

    உங்கள் துணையுடன் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டிய நேரம். இதில் நீங்கள் பங்கு கொண்டு மகிழ்வீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

    நேர்மறையான எண்ணம் மற்றும் திட்டமிடல் மூலம் பதட்டமின்றி இருக்கலாம். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மகரம்:

    உங்களிடம் போதிய தைரியம் காணப்படும். உங்கள் முயற்சிகள் நல்ல பலன்களை அளிக்கும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். திறமையுடன திட்டமிட்டு உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

    உங்கள் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். இன்று செழிப்பான நிலை காணப்படும். காதல் வயபட்ட உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பிரியமானவர் உங்களை நேசிப்பார்.

    இன்று உங்களுக்கு தேவையான ஆற்றல் காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு வழி காட்டும்.

    கும்பம்:

    உங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் உற்சாகம் காணப்படும். மகிழ்ச்சியாக இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. முக்கியமான முடிவுகள் எடுக்க வாரத்தின் துவக்க நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பணியிடத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் பணத்தேவைகள் பூர்த்தியடையும். உங்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைப்பதற்கான அதிர்ஷ்டமான நாள்.

    உங்கள் துணையிடம் இனிமையாகப் பேசுவீர்கள். உங்களின் இந்த அணுகுமுறையால் உங்கள் பிரியமானவர் மகிழ்ச்சியடைவார். உங்கள் மனதில் காணப்படும் அமைதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மீனம்: 

    நீங்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்வீர்கள் என்றாலும் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.

    பணியில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். தொழில் சார்ந்த அணுகுமுறையால் பணிகளை சரிவர ஆற்ற இயலும். உங்கள் சொந்த வளர்ச்சி குறித்த மனக் குழப்பம் காரணமாக பதட்ட உணர்வுடன் காணப்படுவீர்கள்.

    பண வரவும் செலவும் காணப்படுகின்றது. எதிர் காலத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டும். உங்கள் துணையிடம் உங்கள் கருத்துகளை வலியுறுத்துவீர்கள். நல்லுறவை பராமரிக்க இதனை தவிர்த்தல் நலம்.

    உங்கள் சொந்த வளர்ச்சி குறித்த மனக் குழப்பம் காரணமாக பதட்ட உணர்வுடன் காணப்படுவீர்கள்.

    இந்த வாரத்தில் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கலாம்; மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....