Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரத்தில் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கலாம்; மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

    இந்த வாரத்தில் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கலாம்; மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

    மேஷம்:

    உங்கள் புத்திசாலித் தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசிக்கலாம். கலை மற்றும் இசை போன்றவற்றில் ஈடுபட்டு பயனடையலாம். உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். பணி நிமித்தமான பயணங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

    பணவரவு சுமாராக இருக்கும். குடும்ப நலனுக்காக செலவு செய்வீர்கள். அதனால் கையில் இருப்பு குறைவாக இருக்கும். உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.

    நல்ல உணவுமுறை ஆரோக்கியத்தைச் சிறப்பாக தக்க வைக்கும். கால் வலி வர வாய்ப்புள்ளதால் லேசான உடற்பயிற்சி மேற்கொள்ளவும்.

    ரிஷபம்:

    வாரத்தின் துவக்கம் உற்சாகமானதாக இருக்கும். சுய வளர்ச்சி உங்களுக்கு வழி காட்டும். பயணங்கள் ஏற்படலாம். உங்கள் திறமை உங்கள் பணியில் வெளிப்படும். உங்கள் பணிக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

    பணம் வரவு அதிக அளவில் காணப்படும். உங்களால் சேமிக்க இயலும். உங்கள் துணையிடம் நேர்மையாகப் பழகுவீர்கள். இதனால் அவர்கள் உங்களை நன்கு புரிந்துகொள்வார்கள்.

    பிரார்த்தனை அல்லது தியானம் சரியான அணுகுமுறை மேற்கொள்ள உதவும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணத்தை வரவிடாதீர்கள்.

    மிதுனம்:

    வாரத்தின் துவக்கத்தில் சற்று மந்தமான உணர்வுகள் காணப்படும். அதனை தவிர்த்தல் நலம். இன்று அதிக பணிகள் இருப்பதாக உணர்வீர்கள். அதனைக் கையாள கற்றுக் கொள்ளுங்கள்.

    நீங்கள் வெற்றி பெறுவதற்கு சரியாக திட்டமிட வேண்டியது அவசியம். உங்களின் பாதி வேலை முடியும், மீதி வேலை முடியாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

    நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நிதிநிலையை நன்கு சமாளிப்பீர்கள். உங்கள் துணையிடம் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். இந்த உணர்வைத் தவிர்த்து உங்கள் துணையை நகைச்சுவை உணர்வோடு அணுக வேண்டும்.

    உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவழிக்க நேரலாம். கண் எரிச்சல் காரணமாக பாதிப்பிற்கு ஆளாகலாம்.

    கடகம்:

    எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள். உங்கள் பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும்.

    உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவீர்கள். வரவுகள் அதிகமாக காணப்படும். சொத்துக்கள் வாங்குவதற்கு உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.

    உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நல்ல தருணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. பற்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கால் வலி மற்றும் கண் எரிச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால் கவலை ஏற்படும்.

    சிம்மம்:

    உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க வேண்டும் எனில் உங்கள் அணுகுமுறையில் கவனம் தேவை. பாடல்கள் கேட்பது, திரைப்படம் பார்ப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். இதனால் செய்த வேலையையே திரும்ப செய்ய நேரும்.

    நிதியைப் பொறுத்தவரை உங்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். தகவல் பரிமாற்றத்தில் குழப்பங்கள் காணப்படும். இதனால் உங்கள் துணையுடன் கடுமையாக உணர்வுகளை வெளிபடுத்துவீர்க்ள். இதனை தவிர்த்தல் வேண்டும். விட்டுக் கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைக்கலாம்.

    மன உளைச்சல் காரணமாக தோள்கள் மற்றும் கைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்ததனை மற்றும் தியானம் சிறந்தது.

    கன்னி:

    ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும். யோகா மற்றும் தியானம் மூலமும் பலன் பெறலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணிகள அதிகம் இருப்பதாக உணர்வீர்கள். சிறந்த யுக்திகளைக் கையாண்டு கவனமுடன் பணியாற்றினால் இன்றைய செயல்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

    செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளை முடிந்த அளவில் கட்டுப்படுத்தி கையிலிருக்கும் பணத்தில் சமாளிப்பது சிறந்தது. உங்கள் துணையுடன் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் ஒத்துப்போவதும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் அவசியம். புரிதல் மிகவும் அவசியம்.

    கண்கள் மற்றும் பற்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    இந்த வாரத்தில் உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கலாம்; துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....