Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநூறும் அல்ல, ஐநூறும் அல்ல சுமார் 2000 வருடங்களாக தங்கத்தை தந்த பூமிதான் கே.ஜி.எஃப்! -...

    நூறும் அல்ல, ஐநூறும் அல்ல சுமார் 2000 வருடங்களாக தங்கத்தை தந்த பூமிதான் கே.ஜி.எஃப்! – மேலும் தகவல்கள் உள்ளே!

    கே.ஜி.எஃப்-இன் முழு பெயர் கோலார் தங்க வயல் (Kolar Gold Fields). சுருக்கமாக கே.ஜி.எஃப் என அழைக்கப்படுகிறது. இது சுமார் 58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டு உள்ளது. இதன் சிறப்பு பெயர் ‘எல் டொரடோ’.

    கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள கே.ஜி.எஃப் தாலுகாவில் இருக்கிறது இந்த தங்க பூமி. பெங்களூருவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும்; சென்னையிலிருந்து 245 கிலோ மீட்டர் தூரத்திலும் இது அமைந்திருக்கிறது.

    பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானிய அரசர்களுக்கு அடிமையாக இருந்த தென் அமெரிக்க பழங்குடிகளால் உச்சரிக்கப்பட்ட ஸ்பானிய வார்த்தைதான் எல் டொரடோ. தங்கம் கொழிக்கும் நிலம், தங்கத்தால் ஆன ராஜா, தங்க மனிதன், தங்கமானவன், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன நகரம் என்று பல பொருட்களில் இந்த வார்த்தை குறிப்பிடப்படுகிறது.

    எல் டொரடோ 

    கே.ஜி.எஃப். தங்கம் கொழிக்கும் நிலம் என்பதால் அதை எல் டொரடோ என்று அழைக்கின்றனர். சுமார் 500 வருடங்களுக்கு முன்பே ஸ்பானிய அரசர்களும், சாகசக்காரர்களும், வணிகர்களும் எல் டொரடோவைத் தேடி பல ஆபத்தான இடங்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தனர்.

    எல் டொரடோவைக் கண்டுபிடிப்பதே அவர்களின் லட்சியமாக, கனவாக மாறியது. இந்தப் பேராசைப் பயணத்தில் எண்ணிலடங்காத உயிர்கள் பலியாயின. தவிர, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தங்கத்தை எடுக்க லட்சக்கணக்கான அப்பாவிகள் அடிமையாக்கப்பட்டனர். இப்படி ரத்தம் தோய்ந்த வரலாற்றைக் கொண்டதுதான் கே.ஜி.எஃப்.

    பூமியின் ஆழமான சுரங்கங்களில் இதுவும் ஒன்று. இதன் ஆழம் சுமார் 3 ஆயிரம் மீட்டர். இனிமையான பருவநிலையால் மினி இங்கிலாந்து என்று அழைக்கப்பட்டது கே.ஜி.எஃப்.

    ஆசியாவிலேயே மின்சாரம் கிடைக்கப்பெற்ற இரண்டாவது நகரம், கோலார்; முதல் நகரம், டோக்கியோ. இந்திய அரசுக்குக் கீழ் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் கோல்டு மைன்ஸ் லிமிட்டெட்’. சுற்றுச் சூழல் பிரச்னை மற்றும் தங்கம் விலை சரிவின் காரணமாக பிப்ரவரி 28, 2001ம் வருடம் மூடப்பட்டது.

    அதன் பின்னர், எந்தவித ஆரவாரமுமில்லாமல் அமைதியாக தோற்றமளிக்கிறது கே.ஜி.எஃப். ஆனால், 2000 வருடங்களுக்கு மேலாக கே.ஜி.எஃப்பில் தங்கம் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். 1004-ஆம் வருடத்திலிருந்து சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியானது கோலார். 1880-ஆம் வருடம் மூன்றாம் ஜான் டெய்லர் என்பவர் கோலார் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றி ‘ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்.

    1902-ஆம் வருடமே மின்சாரத்தைக் கொண்டுவந்தது இந்நிறுவனம். தங்கம் எடுப்பது உச்சத்திலிருந்தபோது இச்சுரங்கத்தில் 30 ஆயிரம் பேர் வரை வேலை செய்தனர். இங்கிருந்து எடுக்கப்பட்ட தங்கம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.

    அது இங்கிலாந்தில் உள்ள பலரை செல்வ வளமிக்கவர்களாக மாற்றியது. பிறகு 1956-ஆம் வருடம் கோலார் தங்க வயல் தேசியமயமாக்கப்பட்டது. அப்போதிருந்து சுரங்கம் மூடும் வரை 900 டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது.

    2020-ஆம் வருடக் கணக்கின்படி கோலார் தங்கச் சுரங்கத்தை ஒட்டிய பகுதிகளில் சுமார் 2.60 லட்சம் பேர் வசிக்கின்றனர். இடைவிடாமல் 121 ஆண்டுகள் சுரங்கம் இயங்கியிருக்கிறது. தங்கம் எடுப்பதற்காக 10,500 அடிவரைக்கும் கூட சுரங்கத்தைத் தோண்டியிருக்கின்றனர். இதற்கான ஊழியர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சித்தூர், அனந்தபூர் பகுதிகளிலிருந்து வந்துள்ளனர்.

    சுரங்கம் உச்சத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது 95 சதவீத இந்திய தங்கம் இங்கிருந்துதான் கிடைத்தது. சுரங்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது மின்சாரத் தடையோ, தண்ணீர் தட்டுப்பாடோ ஏற்படவில்லை. சுரங்கத்தை மூடியபிறகு தண்ணீர் தட்டுப்பாடும், மின்சாரத் தடையும் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏன் வாசலில் கோலம் போடுகிறோம்? கோலம் உணர்த்தும் அறிவியல் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....