Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புசோயா பிரியாணி இப்படி செய்தால் சுவை அள்ளும்!

    சோயா பிரியாணி இப்படி செய்தால் சுவை அள்ளும்!

    மீல் மேக்கர் என்று சொல்லப்படும் சோயாவை வைத்து சுவையான பிரியாணி செய்யலாம்  வாருங்கள். 

    தேவையான பொருள்கள்: 

    1. சோயா(மீல் மேக்கர்)- 2 கப் 
    2. பாசுமதி அரசி- 2 கப் 
    3. வெங்காயம்- 2 
    4. தக்காளி- 2 
    5. பட்டை- 1 
    6. லவங்கம்- 3 
    7. பிரியாணி இலை- 2
    8. ஏலக்காய்- 4
    9. தயிர்- அரை கப் 
    10. புதினா- ஒரு கைப்பிடி 
    11. மல்லித்தழை- ஒரு கைப்பிடி 
    12. நெய்- 3 மேசைக்கரண்டி 
    13. மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி 
    14. கரமசாலாத்தூள்- 2 மேசைக்கரண்டி 
    15. உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையானஅளவு

    செய்முறை: 

    • மீல் மேக்கரை 5 முதல் 10 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, பிறகு தண்ணீர்  இல்லாமல் நன்றாக பிழிந்து தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • இப்போது மீல் மேக்கர் மசாலா செய்ய வேண்டும். அதற்கு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சிறிது விழுதை மீல் மேக்கருடன் சேர்க்க வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், கரமசாலா, தயிர் சேர்த்து கலந்துவிட்டு குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 
    • குக்கர் அல்லது பாத்திரத்தில் ஒரு மேசைக் கரண்டி நெய்யும் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய்யும் ஊற்றி, அதனுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். 
    • பின்பு அதனுடன் வால் வாலாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். இரண்டு, மூன்று நிமிடங்கள் கழித்து வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.  
    • தக்காளி வதங்க சிறிது உப்பும் சேர்த்துக் கொள்ளலாம். பின் இதனுடன், மிளகாய்த்தூள், கரமசாலாத்தூள், மீதமுள்ள அரைத்து வைத்த விழுதையும் சேர்த்துக் கலந்துவிட அப்படியே சிறிது புதினா, மல்லித்தழையும் தூவி கிளறிவிட வேண்டும். 
    • எல்லாம் சற்று ஒன்றாக கலந்து வதங்கியவுடன், நாம் முன்னரே மசாலா சேர்த்து கலந்து வைத்த மீல் மேக்கரையும் இதனுடன் சேர்க்க வேண்டும். 
    • இருபது முதல் முப்பது நிமிடங்கள் ஊறவைத்த அரிசியை, அதில் சேர்க்க வேண்டும். குக்கராக இருப்பின் 2 கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். தனி பாத்திரத்தில் வைக்க, அரை அல்லது ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 
    • பிறகு, நெய் ஊற்றி அதனுடன் மீதம் இருக்கும் புதினா, மல்லித்தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். தம் செய்ய வேண்டுமென்றால், 10 முதல் 15 நிமிடங்கள் வரை தவா போன்ற கனமான பொருள்களை பயன்படுத்தியும் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். குக்கரில் இரண்டு விசில்கள் விட்டு இறக்கினால் போதும் சுவையான மீல் மேக்கர் பிரியாணி தயார். 

    சத்து: சோயாவில் புரத சத்தானது நிறைந்து காணப்படுகிறது. இதனால், சோயாவை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் தரமானதா என்று பார்த்து வாங்கி பயன்படுத்துதல் நலம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....