Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புஒரு ரூபாய் செலவில்லாமல் பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?

    ஒரு ரூபாய் செலவில்லாமல் பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?

    பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.

    பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    பாதவெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

    தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்கு கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

    மேலும், வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் குறைபாடு, நீண்ட நேரம் நிற்பது, வயது கூடுதல், சொறிநோய், தைராய்டு, நீரிழிவு, சரியான காலணி அணியாதது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

    பாதவெடிப்பு வராமல் தவிர்ப்பது எப்படி?

    வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தினால் வெடிப்பு ஏற்படாது.

    வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் பாத வெடிப்பு மறையும். கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, பாத வெடிப்புகளில் பூசி வர, பாத வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

    ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு, நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.

    வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

    இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.

    வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.

    இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.

    சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.

    மருதாணி இலை…

    மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி அம்மி அல்லது மிக்ஸியில் வைத்து அரைக்கவும். இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் வெடிப்பு மறைய தொடங்கும்.

    வெந்நீருடன் சிறிது கல் உப்பு, கெமிக்கல் கலக்காத ஷாம்புவையும் கூட பயன்படுத்தலாம். மிதமான வெந்நீர் மசாஜுக்குப் பின் பாதங்களை ஈரம் போக சுத்தமான துணியில் துடைத்து எண்ணெய் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைப் பாதுகாப்பாக அதிகரிக்கும்.

    அன்னாசி, பப்பாளி பழங்களையும் கூழாக்கி பாதங்களில் தடவி வந்தால் பாதம் பொலிவாக இருக்கும். அதே போன்று சாம்பார் வெங்காயத்தின் சாற்றை எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பற்றுபோட்டாலும் பாத வெடிப்பு நீங்கிவிடும்.

    பன்னீரையும், கிளிசரினையும் சமமான அளவில் கலந்து, இரவு உறங்கும் முன் பாதங்கள் முழுவதும் தடவி வர பாத வெடிப்புக்கு சீக்கிரமே குட்பை சொல்லிடலாம்.

    விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சம அளவில் எடுத்து, அத்துடன் மஞ்சள் கலந்து, இரவில் கால்களில் அப்ளை செய்யலாம். எதுவுமே இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த சிகிச்சைகள் போதுமானது.

    சோயா பிரியாணி இப்படி செய்தால் சுவை அள்ளும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....