Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்கியூட்டி.. ஸ்வீட்டி.. செல்லம் - முயல் வளர்ப்பு ஒரு பார்வை!

    கியூட்டி.. ஸ்வீட்டி.. செல்லம் – முயல் வளர்ப்பு ஒரு பார்வை!

    வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும். கண் திருஷ்டி மட்டுமின்றி செய்வினைகள், சூனியம், பேய் பிசாசுகள் போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் பெற்றது இந்த பிராணிகள். மேலும், தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியை பெற்றுள்ளது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள்.

    வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தல் என்றவுடன் நாய் வளர்ப்பு மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கிறது. பூனை, முயல், கினி பிக், ஹாம்ஸ்டர் மற்றும் பறவை வளர்ப்பு போன்றவையும் கூட மனநலம் காக்க உதவுவதாக கூறுகின்றனர்.

    சிலர் செல்லப் பிராணிகள் வளர்ப்பை ஆர்வத்துக்காகவும் வளர்த்து வருகின்றனர். முயல்கள் பொதுவாக செல்லப் பிராணிகளாக பலராலும் வளர்க்கப்படுகிறது. அந்த வரிசையில் முயல்கள் வளர்ப்பும் லாபத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஆனால், மற்ற பிராணிகளை வளர்ப்பதுபோல முயல்களை வளர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் சில தொழில்நுட்பங்களை உபயோகித்தால் முயல் வளர்ப்பை எளிதாக்கலாம்.

    முயல் தோற்றம் :

    சிறிய உருவம், மிருதுவான முடி, கியூட்டான செயல்பாடுகள், இவற்றினால் எல்லா வயதினரும் விரும்பும் முயல்கள், ஒப்பீட்டு அளவில் வளர்ப்பதற்கு சுலபமானவை, செலவும் குறைவு. நல்ல முறையில் பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை முயல்கள் உயிர்வாழும். இரண்டு அல்லது மூன்று மாத முயல் குட்டியை வாங்கி வளர்ப்பது சரியாக இருக்கும். முயல் குட்டிகள் மனிதர்களுடன் மிகவும் அன்புடன் பழகக்கூடியவை. ஆனால் வீட்டில் மற்ற விலங்குகள் இருந்தால் அவற்றிடம் இருந்து விலக்கி வைத்திருப்பது அல்லது உங்கள் கண்காணிப்பில் வைப்பது நல்லது.

    தினமும் வெளியே சில மணி நேரம் விளையாடவிட்டால் அவை உற்சாகமாக இருக்கும். எதைப் பார்த்தாலும் பல்லால் கடிக்கும் பழக்கம் கொண்டதால், மின் வயர்கள், நச்சுப்பொருட்கள், காஸ்ட்லி பர்னிச்சர்கள் உள்ளிட்டவற்றை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    முயல் இனங்கள்:

    இந்தியாவை பொருத்தவரை வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், அங்கோரா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய இனங்கள் பெருமளவு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் அங்கோரா இன முயல்கள் உரோமத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை மலைப்பிரதேசம் மற்றும் குளிர்ப்பிரதேசங்களில் மட்டும் வளர்ப்பதற்கு உகந்தவை. ஏனைய இனங்களான வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றை மலைப் பிரதேசங்களிலும் சமதளப் பரப்புகளிலும் வளர்க்கலாம்.

    முயல் வளர்ப்பு:

    பொதுவாக முயல்களை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். முயல் கொட்டகையைத் தென்னங்கீற்று மற்றும் பனை ஓலையால் ஓரளவு காற்றோட்டம் இருக்கும்படி அமைக்க வேண்டும். தென்னங்கீற்று மற்றும் பனை ஓலையில் நெய்யும்போது அறை இருளாக இருக்கும். அப்போதுதான் முயல்களுக்கு இரைதேடுவதற்கு வசதியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முயல்களுக்கு அதிக குளிர் தாக்காமலும் இருக்கும். மிக குறைவான இடத்தில் அதிக எண்ணிக்கையிலான முயல்களை வளர்க்கலாம். தண்ணீர் வளம் குறைந்த பகுதிகளிலும் இவற்றை வளர்க்கலாம்

    உணவு முறை:

    காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 8 மணியளவில் முயலுக்கு இலைதழைகளைப் போடலாம்.

    முட்டைக்கோஸ் தோல், கேரட், நுக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான், வாழை இலை, முள்ளங்கி, அகத்திக்கீரை, வேலி மசால் பிரக்கோலி, ஸ்ப்ரவுட்ஸ், செலரி, மற்றும் பீட்ரூட் உள்ளிட்டவற்றை உணவாக கொடுக்கலாம். இவற்றுக்கு எப்போதும் குடிக்க தண்ணீர் இருக்க வேண்டும்.

    கொடுக்கும் உணவைச் சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும். பசுந்தீவனத்தைக் காலையில் கொடுத்து வந்தால் மாலையாகும் வரை சுறுசுறுப்பாக இருக்கும். பசுந்தீவனம் பெரும்பாலும் கிராமத்தில் அதிகம் கிடைக்கும் தற்போது ஆன்லைனிலும் கிடைக்கிறது. அதனால் தீவனச் செலவை பெரும்பாலும் குறைக்கலாம். இந்த உணவுகளால் முயல்களின் வளர்ச்சியிலும் கொஞ்சம் தெளிவு இருக்கும்.

    முயல்களை கையாளும் முறை:

    முயலைக் காதைப் பிடித்துத் தூக்க கூடாது. காது நரம்புகள் மெல்லிதாக இருக்கும். இடுப்பைப் பிடித்து தூக்குவது நல்லது. முயலைத் தூக்கும்போது ரோமங்கள் உதிரும். அந்த ரோமங்கள் சுவாசப் பாதைக்குள் சென்றால் நோய்கள் நமக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

    முந்தைய நாள் காலை உண்ட உணவின் மீதியும், மாலை உணவின் மீதி மற்றும் முயல்களின் கழிவுகளும் கூண்டின் கீழே இருக்கும். அதைத் தினமும் தவறாது அப்புறப்படுத்த வேண்டும்.

    அதன் பிறகு முயல்களுக்கு வைக்கப்பட்டுள்ள தீவனக் கிண்ணங்களைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு அதில் பசுந்தீவனத்தை நறுக்கியோ அல்லது முழுமையாகவோ வைத்து விடலாம். அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் நீரையும் வைத்து விடவேண்டும்.

    இந்த உணவை முயல் எடுத்துக்கொள்கிறதா என்பதை 12 மணியிலிருந்து 1 மணிவரை கவனிக்க வேண்டும்.

    பெரிய முயலுக்கு பஞ்சகவ்யா தினமும் 3 மி.லி என்ற அளவில் கொடுத்து வந்தால் முயல்களின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகவும், ஈனும் குட்டிகள் அளவும் பெரியதாகவும் இருக்கும். இனவிருத்திக்கும் இணை சேருவதற்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்.

    நோய்த்தாக்குதலும், பராமரிப்பும்:

    முயல்களைத் தாக்கும் நோய்களுள் குடற்புழுநோயும், சொரி நோயும் அடங்கும். குடற்புழு நோயை நீக்க அல்போமர் டானிக்கை முயல்களின் மாதத்தைப் பொறுத்து 45 நாளுக்கு ஒருமுறையும், சிறிய குட்டியாக இருந்தால் 1 மி.லி அளவும், பெரிய முயலாக இருந்தால் 3 மி.லி என்ற அளவிலும் கொடுக்கலாம்.

    இதைக் கொடுத்து வந்தால் மூன்று நாள்களுக்குள் முயல்களுக்குத் தாக்கியுள்ள குடற்புழு நோய் தானாகவே சரியாகிவிடும். முயல்களைத் தாக்கும் சொரி நோய்க்கு வேப்ப எண்ணெய் அல்லது பென்சலின் பென்சாயிலைத் தடவினால் சொரிநோய் குணமாகும்.

    எலான் மஸ்க் மீது வழக்குப்பதிவு?..நடந்தது என்ன? ட்விட்டர் என்னாச்சு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....