Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புபட்டர் சிக்கன் இப்படி செய்து பாருங்கள் நாக்கில் நிச்சயம் எச்சில் ஊறும்!

    பட்டர் சிக்கன் இப்படி செய்து பாருங்கள் நாக்கில் நிச்சயம் எச்சில் ஊறும்!

    பட்டர் சிக்கன் மிகவும் சுவையாக வீட்டிலேயே செய்யலாம் வாருங்கள். 

    தேவையான பொருள்கள்: 

    • சிக்கன்- அரை கிலோ 
    • இஞ்சி பூண்டு விழுது- மூன்று தேக்கரண்டி 
    • தக்காளி- இரண்டு 
    • வெங்காயம்- இரண்டு 
    • காய்ந்த மிளகாய் – நான்கு 
    • பட்டர்- 200 கிராம் 
    • கரமசாலா தூள்- ஒரு தேக்கரண்டி
    • முந்திரி- 12 எண்  
    • தயிர்- அரை கப் 
    • எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி 
    • கொத்தமல்லித் தழை- ஒரு கொத்து 
    • உப்பு, எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு 

    செய்முறை: 

    • துண்டு துண்டாக வெட்டிய எலும்பு இல்லாத சிக்கனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, தயிர், கரமசாலாத் தூள், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு பிழிந்து தடவி வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்  
    • பின்பு ஒரு கடாயில்  100 கிராம் பட்டரை சேர்த்து அதில் வால் வாலாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 12 முந்திரிகள் போன்றவற்றை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். வதக்கிய இந்த மசாலாவை ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் அதை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • ஒரு கடாயில் மீதம் இருக்கும் 100 கிராம் பட்டரை சேர்க்க வேண்டும். ஊறவைத்த மசாலா சிக்கனை எடுத்து அதில் ஒவ்வொன்றாக படரும் படி வைக்க வேண்டும். பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் கறியை பட்டரில் வேக வைக்க வேண்டும். 
    • சிக்கன் வெந்ததும் அதை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மீண்டும் அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்க்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு பட்டரில் வறுத்தச் சிக்கனை ஒவ்வொன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்ததும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். 
    • பின்பு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைத்தவுடன் வடித்த சாதமோ அல்லது சப்பாத்தியுடன் சூடான சுவையான நல்ல இணையாக பட்டர் சிக்கனை சேர்த்து உண்ணலாம். 

    சத்து: பட்டரில் அதிகப்படியான கலோரிகளும் கொழுப்புகளும் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமான வைட்டமின் ஏ மற்றும் இ சத்துக்கள் உள்ளன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....