Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்வெவ்வேறு காரணங்களுக்காக ட்ரெண்டிங்கில் இருக்கும் தளபதி விஜய்! - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    வெவ்வேறு காரணங்களுக்காக ட்ரெண்டிங்கில் இருக்கும் தளபதி விஜய்! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தைக் காண விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது, திரையுலக ரசிகர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

    பீஸ்ட் முன்பதிவு

    பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர், பீஸ்ட் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துவிட்டது என்பதே உண்மை. அதிகாரப்பூர்வமாக தமிழக திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாக பல திரையரங்குகள் அறிவித்து வருகின்றனர்.

    இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் ஏமாற்றத்திலும், மறுபக்கம் குதூகலத்திலும் உள்ளனர். டிக்கெட் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றத்திற்கும், இவ்வளவு சீக்கிரம் டிக்கெட் முடிந்ததா என்பது குதூகலத்திற்கும் காரணமாய் அமைகின்றன. இந்நிகழ்வானது, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

    ஷாருக்கானின் வாழ்த்து

    இதோடு, இந்திய திரையுலகின் மிக முக்கிய நடிகர், பாலிவூட் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் ஹிந்தி ட்ரைலரை பதிவிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

    அப்பதிவில் ஷாருக்கான் அவர்கள், என்னைப் போலவே மிக தீவிர விஜய் ரசிகரான அட்லீ அவர்களுடன் தற்போது நான் அமர்ந்திருக்கிறேன் என பதிவிட்டிருப்பது விஐய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாருக்கானின் இந்த வாழ்த்திற்கு நன்றி கூறி அட்லீ அவர்களும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில், என்னோட அண்ணன், என்னோட தளபதி என்ற வார்த்தைகளை அட்லீ உபயோகித்திருப்பது விஐய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அட்லீ அவர்கள் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் விஜய் அவர்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    தளபதி 66 

    பீஸ்ட் திரைப்படத்தின் படப்படிப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே, தளபதி விஜய் அவர்களின் 66 ஆவது திரைப்படம் குறித்த பேச்சுகள் பலமாக பேசப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அப்போது வெளியிடப்பட்டது. 

    அந்த அறிவிப்பின்படி,  விஜய் அவர்கள் நடிக்கவிருக்கும் 66-வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தை தில் ராஜூ அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என்ற பெயரும் வைக்கப்பட்டது. ஆதலால், பீஸ்ட் திரைப்படத்தின் உருவாக்கத்தில் இருந்தே தளபதி 66 சமந்தமான பேச்சுகள் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருந்தன.

    பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் இச்சூழலில்,  தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. இந்த கேள்விக்கு பதிலாக ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    விஜய்

    ஆம்! தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் இருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பூஜை புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதன் மூலம் சத்தமே இல்லாமல் படக்குழு பூஜையை நிகழ்த்தி, படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தளபதி 66 திரைப்படத்திற்கு ராஷ்மிகா கதாநாயகியாகவும், தமன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் சரத்குமார் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதன்மூலம், தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்திற்காகவும், தளபதி 66 திரைப்படத்திற்காகவும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார். 

    பீஸ்ட் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ரசிகர்கள் அதிர்ச்சி – முழு தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....