Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் டை ஹார்டு நாயகன் : இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு...

    சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் டை ஹார்டு நாயகன் : இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு வியாதியா ?

    டை ஹார்டுதிரைப்படத்தில் தன்னுடைய ஆக்சன் திறமைகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் புரூஸ் வில்லிஸ். இவர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தான் சினிமாவை விட்டு விலகுவதாக தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். தான் அபேஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த முடிவை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார் புரூஸ் வில்லிஸ். 

    இதுகுறித்து பேசிய அவர், இந்த நோய் பற்றி நீங்கள் கேள்விப்படுவது முதல் முறையாக இருக்கலாம். ஆனால், இது என்னுடைய வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

    அபேஷியா என்பது பேசுவது மற்றும் உச்சரிப்பு தொடர்பான நோய் ஆகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக பேச இயலாது. பேசும்பொழுது தெளிவான உச்சரிப்புகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாது. 

    நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு தூக்கத்தில் இருக்கும்போதே மூளையில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென பக்கவாதமும் ஏற்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவையெல்லாம் நடந்தது என்று கூறினார் புரூஸ் வில்லிஸ். 

    பின்னர்தான் எனக்கு பக்கவாதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உடலில் தெரிந்தன. நான் என்னுடைய வலது கையை பயன்படுத்த முடியவில்லை. இழந்துபோன என்னுடைய உடல் வலிமையை மீட்டெடுக்கும் முயற்சியில் என்னுடைய மனக்கூர்மை முற்றிலுமாக சிதைந்து போனது. ஆனாலும், நான் அதிஷ்டசாலி தான். இன்னும் என்னால் நடக்க முடிகிறது மற்றும் பேச முடிகிறது என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் புரூஸ் வில்லிஸ். 

    பிஸியோதெரபியின் மூலம் எனக்கு பழைய உடல் வலிமை திரும்ப கிடைக்க ஆரம்பித்தது. முதலில் என்னால் ஒரு பென்சிலை திடமாக பிடிக்க முடிந்தது. அதன் பின்பு என்னால் சிறிது சிறிதாக எழுத முடிந்தது. நாளடைவில் என்னால் கீபோர்டில் டைப் செய்யவும் முடிந்தது. 

    நான் மீண்டும் என்னுடைய பழைய வேலைக்கு திரும்பினேன். எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்தன. அனைத்தையும் முடிக்க வேண்டிய முயற்சியில் ஈடுபட்டேன். அந்த சமயத்தில் தான் நான் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன். என்னுடைய சில வார்த்தைகள் என்னை விட்டு போயிருந்தன. 

    நான் மெல்லமாக அபேஷியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர ஆரம்பித்தேன். பெயரை கேட்பதற்கு ஏதோ ஒரு அழகிய லிப்ஸ்டிக் அல்லது இரவுநேர விடுதியைப்போல இருக்கிறது. ஆனால் அது என்னுடைய சில வார்த்தைகளை யோசிப்பதற்குத் தடையாகவும், சில வார்த்தைகளை பேச முடியாதவாறும் செய்து விட்டது என உருக்கத்துடன் கூறினார். 

    ஹாலிவுட் சினிமா வரலாற்றில் “டை ஹார்டு” படத்தின் மூலம் கதாநாயகனாய் வலம் வந்த புரூஸ் வில்லிஸின் பயணம் சினிமாவில் இத்தோடு முடிகின்றது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....