Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புவிநாயகர் சதுர்த்திக்கு பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது?

    விநாயகர் சதுர்த்திக்கு பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது?

    விநாயகர் சதுர்த்திக்கு பூரண கொழுக்கட்டை செய்து படையல் போடலாம் வாருங்கள்.

    தேவையான பொருள்கள்:

    1. அரிசி மாவு- ஒரு கப் 
    2. துருவிய தேங்காய்- 2 கப் 
    3. நெய்- 2 மேசைக்கரண்டி 
    4. துருவிய வெல்லம்- ஒரு கப் 
    5. உப்பு- தேவையான அளவு 
    6. தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை:

    • முதலில் பூரணத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய தேங்காயைச் சற்று வதக்கி கொள்ள வேண்டும். 
    • பின்பு, அதனுடன் துருவிய வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். 2 அல்லது 3 நிமிடங்கள் ஒன்றாக கலந்து விட வேண்டும். அதனை இறக்கி, ஆற வைக்க வேண்டும். 
    • இதற்கு அடுத்து, கொழுக்கட்டை மாவு எடுத்து அதனுடன் சிறிது உப்பு, நெய் சேர்க்க வேண்டும். இவற்றுடன் சற்று சூடேறிய தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். 
    • (நீங்கள் கடைகளில் வாங்கும் க்ஸ்ஒத்துக்கட்டி மாவு என்றால் நீங்கள் எடுக்கும் கப் அளவிற்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்தல் சரியாக இருக்கும்.)
    • கொழுக்கட்டை மாவு பதம் அதிக தண்ணீராகவோ அல்லது கட்டியாகவோ இருக்க கூடாது. 
    • மாவு கைப்பிடிக்கும் சூடு இருந்தால், உடனே அந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து, அதை கையில் நன்றாக உருட்டி கொள்ள வேண்டும். 
    • பிறகு, மாவினை நன்றாக தட்டி குடுவையாக கொண்டு வர வேண்டும். அதனுள் தேங்காய் பூரணத்தை வைக்க வேண்டும்.தொடர்ந்து பூரணம் வெளியே வராதபடி கொழுக்கட்டையின் முனைகளை பிடிக்க வேண்டும். 
    • உங்களுக்கு பிடித்த வடிவில் கொழுக்கட்டைகளை செய்யலாம். ஆனால், அதில் மாவு பதம் மட்டும் மிக முக்கியம்.
    • (கொழுக்கட்டை மாவினை ஆற விடக் கூடாது. ஆறினால் கொழுக்கட்டை பிடிக்கும் பதம் வரமால், மாவு காய்ந்து கட்டியாகிவிடும்.) 
    • பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 

    அவ்வளவு தான்! 10 நிமிடங்கள் கழித்து கொழுக்கட்டைகளை எடுத்து விநாயகருக்கு படையலிட்டு உண்டால் சுவை அள்ளும்.

    கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....