Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்டி.ராஜேந்தர் அவர்கள் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு விமர்சனம் தந்தால் எப்படியிருக்கும்?

    டி.ராஜேந்தர் அவர்கள் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு விமர்சனம் தந்தால் எப்படியிருக்கும்?

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான், திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்தை 

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யாரடி நீ மோகனி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு மித்ரன் ஜவகர் 4-வது முறையாக நடிகர் தனுஷை திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் இயக்கியுள்ளார். மேலும், நடிகர் தனுஷ் மற்றும் அனிரூத் இணை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்துள்ளது. 

    திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவாணி சங்கர் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் எளிமையாக அதே சமயம் கமர்ஷியல் திரைப்படம் என்று கூறத் தேவையான அத்தனை குணநலன்களையும் தன்னுள் வைத்துள்ளது, இந்த திருச்சிற்றம்பலம். 

    நேர்மறை விமர்சனங்களை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் குறித்து பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் அவர்கள் பேசினால் எப்படியிருக்கும் என்று யாராவது யோசித்துள்ளீர்களா? அவருக்கே உரிய ரைமிங், அந்த ரைமிங்கில் ஒரு சின்ன திரைவிமர்சனம். அட்டகாசமாக இருக்குமல்லவா! 

    அப்படியாக டி.ராஜேந்தர் அவர்கள் ஒருவேளை திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு தனக்கே உரிய பாணியில் விமர்சனம் கொடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்பதன் வெளிப்பாடே கீழுள்ள விமர்சனம். 

    டி.ராஜேந்தர் ஸ்டைலில் ஒரு விமர்சனம்:
    இது கமர்ஷியல் களம்
    அதுனால லாஜிக்குக்கு இல்ல இடம் 
    இருந்தாலும் ரசிக்க வைக்குது படம்
    தம்பி தனுஷ் நடிப்புல இல்ல கலப்படம்
    பாரதிராஜா நடிப்புக்கு கொடுக்கலாம் கீரிடம்
    பிரகாஷ் ராஜ் எப்பவும்போல பிரம்மாதம்
    நித்யாமேனன் ஷோபானாவா அம்சம்
    கதை முழுசும் பயணிக்குது நேசம் 
    அதனால நிறையுது மனம் 
    குறைகள தூரத்தள்ளுது ஒளிப்படம்
    பாடல் எல்லாம் வேற ரகம்
    அதுலயும் மேகம் கருக்குதா பதிக்குது தடம்
    வசனம் மனசுக்கு ரொம்ப நெருக்கம் 
    தனுஷ் அம்மா பத்தி பேசுறப்போ கண்ணும் வேர்க்கும் 
     இப்படியும் படம் எடுக்கலாம்னு இது ஒரு பாடம் 
    இயக்குனருக்கு திருச்சிற்றம்பலம் தந்திருக்குது பலம்
    இனி தமிழ் சினிமா அவருக்கு தரும் வரம் 
    தியேட்டருல நிறையுது கூட்டம் 
    பாக்ஸ் ஆஃபிஸூல கொட்டுது பணம்
    ஆக மொத்ததுல திருச்சிற்றம்பலம் தரம் 

    அஜித்குமார் நடிக்கும் ‘ஏகே-62’ இந்த திருநாளிலா வெளியாகிறது? வெளிவந்த தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....