Friday, March 15, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புபனிக்காலத்தில் சப்பாத்திக்கு இப்படி காளான் தொக்கு செய்து பாருங்க!

    பனிக்காலத்தில் சப்பாத்திக்கு இப்படி காளான் தொக்கு செய்து பாருங்க!

    நமது ஊர்களில் காலையும் இரவும் இப்போது டிபன் என்று ஆகி விட்டது. டிபன்னில் என்னன்னவோ வெரைட்டி இருக்கின்றன. ஆனால், நம்மில் பலர் எப்போதும் செய்வது இட்லியும் தோசையும் தான். இதற்கு என்று நாம் தொட்டுக்க அதிகபட்சமாக செய்வது கார சட்னியும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் தான். 

    இல்லை.. இல்லை.. எங்கள் வீட்டில் இரவு ஆனால், சப்பாத்தி மட்டும் தான் சாப்பிடுவோம் என்றால், அதிலும் சிலர் ஒரு வகையையே செய்து செய்து போர் அடித்திருக்கும். அப்போ, வேறு என்னதான் செய்வது என்று கேட்டால் சற்று வித்தியாசமாக காளான் தொக்கு செய்து பாருங்களேன்…

    தேவையான பொருள்கள்:

    1. காளான்- 250 கிராம்
    2. வெங்காயம்- 2 எண் 
    3. தக்காளி- 2 எண் 
    4. பட்டை- 1 
    5. லவங்கம்- 2
    6. ஏலக்காய்- 3
    7. இஞ்சி, பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 
    8. மஞ்சள்தூள்- கால் தேக்கரண்டி 
    9. மல்லித்தூள்- 1 தேக்கரண்டி 
    10. மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி 
    11. கரமசாலாதூள்- 1 தேக்கரண்டி 
    12. காய்ந்த மிளகாய்- 2 எண் 
    13. முந்திரி- 100 கிராம் 
    14. கருவேப்பில்லை- சிறிதளவு 
    15. கொத்த மல்லித்தழை- சிறிதளவு 
    16. உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை:

    • வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். காளானை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 
    • நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை தனித் தனியே அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் முந்திரியை தனியே அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
    • பிறகு ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றியும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். அதோடு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். 
    • பின்பு அதனுடன் அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்க்க வேண்டும். இரண்டும் நன்றாக கொதிக்க மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் உள்ளிட்ட பொருட்களை சேர்க்க வேண்டும். 
    • மசலா வாசனை சென்றதும், காளானை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அப்படியே மூன்று நிமிடம் மூடிய நிலையில் வேக வைக்க வேண்டும்.
    • அதன் பிறகு முந்திரி விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி 6 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவு தான், கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான காளான் தொக்கு தயார். 

    இந்த குளிருக்கு சுவையான செட்டிநாடு ஸ்டைலில் காரக்குழம்பு வைப்பது எப்படி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....