Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டக்காவில் இன்று தொடக்கம்...

    வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டக்காவில் இன்று தொடக்கம்…

    இன்று இந்தியா மற்றும் வங்கதேசம் மோதவுள்ள முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியுள்ளது. இப்போட்டிக்காக, இரு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகின்றனர். 

    இன்று மதியம் 12.30 மணிக்கு வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டியானது நடைபெறவுள்ளது. 

    முன்னதாக, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஷமி, தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. ஷமிக்கு பிறகு உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

    மேலும், வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து அவரும் விலகியுள்ளார். 

    இந்திய அணி:

    ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் , ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், முகமது. சிராஜ், தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென்.

    வங்கதேசம் அணி:

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ, யாசிர் அலி, ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், அபிஃப் ஹொசைன் துருபோ, எபடோட் ஹொசைன், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம் ( விக்கெட் கீப்பர்) நூர் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது மற்றும் தஸ்கின் அகமது.

    கால்பந்து உலகக் கோப்பை போட்டி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....