Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாட்களாக அமையும். கணவன்-மனைவி இடையே அன்பும் காதலும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் விலகி அதற்கான நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமான சூழல் அமையும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு, செய்யும் செயலில் மகிழ்ச்சியும் திருப்தி அடையும் நாட்களாக இருக்கின்றன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக வரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீர்ந்து இப்போது ஒரு முடிவுக்கு வரும். ஒவ்வொரு நாளும் நீங்கள் உணர்ந்து அனுபவித்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் எப்போதும் போல் வருமானம் இருக்கும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் புதிய முயற்சிகளுக்கு அடித்தளம் காணும் நாட்களாக இருக்கின்றன. கணவன் மனைவி இடையே இருந்த சிறிய பிரச்சனைகள் விலகி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த தொல்லைகள் குறையும். முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண நேரிடும். தொழிலில் எப்போதும் இருக்கும் நிலையே தொடரும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சற்று சுமாரான வாரமாக அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் பொறுமையுடன் இருப்பது மிக அவசியம். தொழிலில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பதற்ற நிலையை தடுக்க அமைதி மற்றும் தியானத்தை கடைபிடியுங்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்களை கொண்டு வெற்றிக் காணும் நல்ல நாட்களாக அமைகின்றன. செலவுகள் அதிகரித்தாலும் அது உங்களுக்கு ஒரு வகையில் மன மகிழ்ச்சி தரக் கூடியதாகவே இருக்கும். உங்கள் துணையுடன் நீங்கள் அதீத புரிதலுடன் இருப்பீர்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் இருப்பினும் அதில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு மனமகிழும் நல்ல நாட்களாக இருக்கின்றன. உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப நிச்சயம் அதற்கான பலன் உண்டு. குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த நேரிடும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இருப்பினும் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பது கடினம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும்.

    இதையும் படிங்க: 200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் செல்லாத அதிசய கோயில்; ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....