Friday, March 15, 2024
மேலும்
    Homeஆன்மிகம்200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் செல்லாத அதிசய கோயில்; ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?

    200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் செல்லாத அதிசய கோயில்; ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, ஆண்கள் மட்டுமே வழிபடும் மிகப்பழைமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயிலின் குடமுழுக்கு இன்று வெள்ளிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

    சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கிபுரம் ஊராட்சியில் பழனியாபுரம் காலனி எல்லைப்பகுதியில் இந்த அஞ்சலான்குடை என்ற முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. 

    200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், அவ்வூர் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே சென்று வழிபடும் தளமாக அமைந்துள்ளது. அதாவது, பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாது.

    இந்தக் கோயில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருப்பதால், இரவு நேரத்தில் காவல் தெய்வம் முனி உலா வருவதாகவும், குறி சொல்லும் வேட்டுவர்கள் சக்தி திரட்டுவதாகவும் அப்பகுதியில் நம்பப்படுகிறது. 

    இங்கு மூலவர் கற்சிலை வடிவமைப்பில் காணப்படுகிறார். மூலவருக்கு வட திசையில் சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய மூன்று உருவங்கள் மிகப்பெரிய சிலைகளாக பல ஆண்டுகளாக காணப்படுகின்றன. 

    இந்தக்கோயிலுக்கு செல்லும் ஆண்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி, கோழி முறித்து, அவற்றை சமைத்து படையலிட்டு வழிபாடு செய்கின்றனர். 

    ஆண்கள் இந்தக் கோயிலுக்கு செல்லக் காரணம், முக்கியமாக அவர்களின் திருமண வேண்டுதல்களை வைத்து தான். நல்ல மனைவி வேண்டியும் வீடு, தொழில் அமைய வேண்டியும், நோய் நீங்க வேண்டியும் வழிபாடு செய்கின்றனர். இருப்பினும், வேண்டுதல் முடித்து கொண்டுவரப்படும் பிரசாதங்களும் விபூதிகளும் பெண்கள் சாப்பிடுவதும் இல்லை, நெற்றியில் வைத்துக்கொள்வதும் இல்லை. 

    வாழப்பாடி பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்தக்கோயில், மிகவும் பழைமையானதாக இருந்து வருவதால், தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இன்று இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான ஆண்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

    இதையும் படிங்க: மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....