Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னை: தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:

    பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்.

    10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பார்கள். பதவி உயர்வை தாமதப்படுத்தினார் அவர்களுக்கு பணிநிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

    மூத்த பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியர்களில் 10 பேர் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனர்!

    பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் ஆளுனர் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும். அவர்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்கமீண்டும் தர்மயுத்தம்? அதிமுக சட்ட விதிகளை பாதுகாக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....