Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையில் அதிரடி: லிட்டருக்கு 60-ஆக உயர்த்திய தமிழக அரசு..!

    ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையில் அதிரடி: லிட்டருக்கு 60-ஆக உயர்த்திய தமிழக அரசு..!

    பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக ஆவின்‌ நிர்வாகம்‌ அறிவித்துள்ளது. 

    ஆரஞ்சு நிற பால்‌ பாக்கெட்‌ சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.12 ஆகவும்‌, ஒரு லிட்டர்‌ விலை ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின்‌ நிர்வாகம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

    ஆவின்‌ கொள்முதல்‌ விலையாக பசும்‌ பால்‌ கொள்முதல்‌ விலை லிட்டருக்கு ரூ.3 ஆக உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகவும்‌, எருமைப்‌ பால்‌ லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு ரூ.44 ஆக உயர்த்தி வழங்கப்படும்‌. இந்த விலை உயர்வின்‌ காரணமாக ஏற்படும்‌ கூடுதல்‌ செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும்‌

    வகையில்‌ விற்பனை விலை உயர்த்த வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பால்‌ பாக்கெட்‌ சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.12 ஆகவும்‌, ஒரு லிட்டர்‌ விலை ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அட்டைத்தாரர்களுக்கு விலை மாற்றமின்றி ஒரு லிட்டர்‌ ஆரஞ்ச்‌ பால்‌ பாக்கெட்‌ ரூ.46-க்கே விற்பனை செய்யப்படும்‌.

    இந்த விலை உயர்வு நாளை முதல்‌ அமலுக்கு வருகிறது. இருப்பினும்‌, நுகர்வோரின்‌ நலன்‌ கருதி சமன்படுத்தப்பட்ட நீல நிற பாக்கெட்‌ பால்‌ மற்றும்‌ நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால்‌ பாக்கெட்டின்‌ விலையில்‌ மாற்றமின்றி தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கு பின்னரும்‌ ஆவின்‌ நிறகொழுப்பு பால்‌ (அட்டை) தனியார்‌ பாலின்‌ விலையை ஒப்பிடுகையில்‌ ரூ.24 குறைவு. சில்லறை விலையில்‌ விற்கப்படும்‌ நிறைகெழுப்பு பால்‌ தனியார்‌ பாலின்‌ விலையை ஒப்பிடுகையில்‌ ரூ.10 குறைவு எனவும்‌, பால்‌ உற்பத்தியாளர்களின்‌ நலன்‌ கருதி இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதை கருத்தில்‌ கொண்டு நுகர்வோர்களும்‌, சில்லறை விற்பனையாளர்களும்‌, மொத்த விற்பனையாளர்களும்‌ தொடர்ந்து ஆவின்‌ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: வெள்ள மேலாண்மைக்குழு ஆய்வு செய்து நிரந்திரத் தீர்வினை வழங்கும்-கே.என்.நேரு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....