Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெள்ள மேலாண்மைக்குழு ஆய்வு செய்து நிரந்திரத் தீர்வினை வழங்கும்-கே.என்.நேரு

    வெள்ள மேலாண்மைக்குழு ஆய்வு செய்து நிரந்திரத் தீர்வினை வழங்கும்-கே.என்.நேரு

    தற்சமயம் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை இந்த வெள்ள மேலாண்மைக்குழு ஆய்வு செய்து நிரந்திரத் தீர்வினை வழங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார் .

    சென்னையின் பல பகுதிகளில் பெய்து வரும் பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்கர் கே.என் நேரு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    அமைச்சர்கள் மழைநீரை பார்வையிட்டு, அதை வெளியேற்ற அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கடந்த 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழைநீர் தேங்கியதாகவும், மழை வெள்ளைப் பாதிப்புகளிலிருந்து நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் வெள்ள மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    மேலும், தற்சமயம் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை இந்த வெள்ள மேலாண்மைக்குழு ஆய்வு செய்து நிரந்திரத் தீர்வினை வழங்கவுள்ளதாகவும், இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கொளத்தூர் என்ன கன்னித்தீவா? திமுகவினரை சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....