Wednesday, March 20, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு அதிகரிக்க கூடிய நாட்களாக இருக்கின்றன. பயணங்கள் உங்களுக்கு பலனளிக்க கூடியதாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தொழிலில் இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொறுப்புகள் அதிகமாவதால், திட்டமிட்டுசெயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் உற்சாகமான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, மகிழ்ச்சியை கண் கூடக் காண வேண்டிய நாட்களாக இருக்கின்றன. அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க கூடும். தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். உங்கள் வேலைகளில் நீங்கள் எப்போதும் நேரத்தை செலவிடுவீர்கள். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களின் திறமையை வெளிபப்டுத்தக் கூடிய நாட்களாக அமையும். அலுவலகத்தில் வேலை கூடினாலும், நீங்கள் சிறப்புடன் செய்து காட்டுவீர்கள். அதே சமயம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பொறுமையை கடைபிடிப்பது அவசியம். தொழிலில் சில செலவுகள் இருக்கும். இருப்பினும் பிற்காலத்தில் ஆதாயமுள்ளதாக அது அமையும். நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மன மகிழ்வைத் தரும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களின் கவனம் மூலம் பலன் பெறக்கூடிய நாட்களாக இருக்கின்றன. தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்கும். உங்கள் கருத்துகளை மற்றவர்களுக்கு தெளிவு படுத்துவதில் கவனமுடன் இருங்கள். வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொழிலில் எப்போதும் போல் நல்ல லாபம் இருக்கும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள். 

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் ஆன்மிக வழிபாட்டில் அதிக நாட்டம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் உற்சாகமுடன் இருப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் நீங்கள் முயற்சியுடனும் நம்பிக்கையோடும்  இருப்பதால் செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்களின் ஆலோசனைகள் அலுவலகத்தில் நல்ல மதிப்பை பெற்றுத் தரும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உங்கள் புத்திசாலித்தனத்தால் சிக்கல்களை எளிதாக சமாளித்து காட்டுவீர்கள். பயணங்களில் கவனமுடன் இருப்பது அவசியம். உண்ணும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....