Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலக மீனவர் தினத்தையொட்டி வித்தியாசமான முறையில் படகுகளில் ஊர்வலம்: மீனவர் கொடி, தேசியக்கொடி ஏற்றி கொண்டாட்டம்..

    உலக மீனவர் தினத்தையொட்டி வித்தியாசமான முறையில் படகுகளில் ஊர்வலம்: மீனவர் கொடி, தேசியக்கொடி ஏற்றி கொண்டாட்டம்..

    உலக மீனவர் தினத்தையொட்டி புதுச்சேரியில் ஏனாம் பகுதியில் மீனவர்கள் நடுக்கடலில் படகுகளில் ஊர்வலம் மேற்கொண்டு மீனவர் தினத்தை கொண்டாடினர்.

    உலக மீனவர் தினம் இன்று மீனவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் உள்ள சிங்கார வேலர் சிலைக்கு பல்வேறு கட்சியினர், மீனவர்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா கோதாவரி ஆற்றுப்பகுதியில் உள்ளது. ஆறும் கடலும் சேரும் இப்பகுதியில் மீனவர்கள் உலக மீனவர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.

    1000-க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் ஊர்வலம் மேற்கொண்டனர். இதனை முன்னாள் அமைச்சரும் புதுச்சேரி அரசிற்கான டில்லி சிறப்பு பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மீனவர்கள் தங்களின் படகுகளில் மீனவர் கொடி, தேசியக்கொடி ஆகியவற்றை ஏற்றிய வண்ணம் ஊர்வலமாக வந்து மகிழ்வுடன் சென்றனர்.

    பிரேமம் இயக்குநரின் அடுத்த படைப்பு; வெளிவந்த ‘கோல்டு’ அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....