Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'ட்விட்டரில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரைக்கமாட்டேன்' - நிறுவன துணைத் தலைவர் பகிரங்கம்!

    ‘ட்விட்டரில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரைக்கமாட்டேன்’ – நிறுவன துணைத் தலைவர் பகிரங்கம்!

    ட்விட்டர் நிர்வாகத்தின் முன்னாள் துணைத் தலைவர், ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரை செய்யமாட்டேன் என அறிவித்துள்ளார்.

    எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. 

    இதனால், எலான் மஸ்க் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இவர் மீது மட்டுமல்லாமல், ட்விட்டர் மீதும் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், உலக அளவிலான ட்விட்டர் நிர்வாகத்தின் துணைத் தலைவராக பணிபுரிந்த கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன், ட்விட்டர் நிறுவனத்தில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரை செய்யமாட்டேன் என அறிவித்துள்ளார்.

    இவரின் அறிவிப்பு மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ட்விட்டரில் என்னதான் நடக்கிறதென கேள்விகள் எழும்புகின்றன. மேலும், கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன் கூறுகையில், ஏலத் தொகை மூலம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய முயற்சி நச்சுத்தன்மை வாய்ந்தது. நான் இப்படி உணருவேன் என நினைக்கவில்லை. ஆனால், இதுதான் உண்மை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அரசு கேபிள் டிவிக்கே இப்படி ஒரு நிலமையா? இரண்டு நாட்களாக முடங்கியதற்கு இதுதான் காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....