Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் - பாகம் 2

    நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் – பாகம் 2

    நாயன்மார்கள் வரலாறு :

    நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள்; சிவத்தொண்டே உயிர்நாதம் என வாழ்ந்தவர்கள். அவர்கள் வரலாறு எவ்விதம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது என்று பார்ப்போம்.

    திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருடைய பேரருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பியின் மூலமாக, இராசராசசோழன் தேவாரத் திருமுறைகள் தில்லைப் பொன்னம்பலத்தின் அருகே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் இலச்சினையுள்ள அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்ததை அறிந்தான்.

    தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி, தேவார ஆசிரியர் மூவர் திரு உருவங்களுக்கும் வழிபாடு செய்து தில்லைத் திருவீதிகளில் எழுந்தருளச் செய்து, பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்த்த போது பெரும்பாலான ஏடுகள் செல்லரித்துக் கிடந்ததை கண்டு மனம் வருந்தினான் மன்னன்.

    “இக்காலத்துக்கு வேண்டிய தேவாரப் பதிகங்களைத் தவிர மற்றவற்றை செல்லரிக்கச் செய்தோம்” என்ற அருள் வாக்கினால் மனம் தேறிய மன்னன், நம்பியாண்டார் நம்பியிடம் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை தொகுத்து தருமாறு வேண்டினான்.

    நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும், மாணிக்க வாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எனும் இரு நூல்களை எட்டாம் திருமுறையாகவும் தொகுத்தார்.

    திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் 28 மற்றும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பதிகம் ஆகிய 29 பதிகங்களை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரப் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும் தொகுத்தார்.

    திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் ஆகிய பிரபந்தங்களையும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய 89 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய 1400 பதிகங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்துக் கொடுத்தார்.

    பின்னர் சேக்கிழார் பாடிய திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாக ஏற்கப்பட்டது.

    நாயன்மாரின் பட்டியல்:

    நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.

    சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.

    அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

    63 நாயன்மார் மற்றும் 9 தொகையடியார் யார் என்று பார்ப்போம்.

    1. திருநீலகண்ட நாயனார்:

    கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

    2. இயற்பகை நாயனார்:

    சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

    3. இளையான்குடிமாற நாயனார்:

    நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

    4. மெய்ப்பொருளார்:

    தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
    இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்துக்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

    5. விறல்மிண்டர்:

    சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

    6. அமர்நீதியார்:

    சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக,  தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

    7. எறிபத்தர்:

    சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

    8. ஏனாதிநாதர்:
    கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

    9. கண்ணப்பர்:

    பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

    10. குங்கிவியக்கலயர்:

    சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

    அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....